ஓடி வருகிறான் உதயசூரியன்

ஓடி வருகிறான் உதயசூரியன்     கடந்த 15 மாதங்களுக்கு மேலாக கலைஞர் கருணாநிதியை தி.மு.க தொண்டர்களும்- தமிழக மக்களும் ஏன் அவருக்கு வாக்களித்த திருவாரூர் தொகுதி மக்களும் பார்க்க வில்லை. இடையில் ஒரு

Read more

செருப்பால் அடியுங்கள்

செருப்பால் அடியுங்கள் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்று பாரதியார் பாடிய நாட்டில் தான் இத்தனை கொடுமைகளும் அதன் தொடர்ச்சியாக தான் இந்த செய்தி கட்டுரை. நமது ‘ஹலோ ஆசியா’வின்

Read more

தமிழின் பெருமை சிங்கப்பூர்- மகிழினி.

தமிழின் பெருமை சிங்கப்பூர்- மகிழினி. சிங்கப்பூர் அரசு தமிழை அதன் ஆட்சி மொழிகளுள் ஒன்றாகஆக்கி ஏற்கனவே பெருமை படுத்தி உள்ளது. மேலும் தமிழ்மொழிக்கான சிறப்பான பங்களிப்பபை அளிப்பவர்களுக்கு ‘ வளர்தமிழ் இயக்கத்தின்’ மூலம் வருடந்தோறும் விருது கொடுத்துஉற்சாகப்படுத்தி வருகிறது. இதற்கெல்லாம் மேலாக தமிழர்களை கவுரமாக நடத்தி  பல அமைச்சர் மற்றும் எம்.பி. பதவிகளை தமிழர்களுக்கு வழங்கி உள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர் அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம்’தமிழ் சொல்வளக் கையேடு’ என்ற 200 பக்கம் கொண்ட கலைச்சொல்அகராதியை வெளியிட்டுள்ளது. இந்த கலைச்சொல் அகராதிளைதேசிய மொழிபெயர்ப்புக் குழு மற்றும் தமிழ் மொழி வளக்குழுவினர்தீவிர முயற்சி மற்றும் கடும் உழைப்பு கொடுத்த உருவாக்கிஉள்ளனர். இவர்களது உழைப்பிற்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாகஇந்த கையேட்டை அந்நாட்டு அதிபர் வெளியிட்டு தமிழுக்குபெருமை சேர்த்துள்ளார். இந்த கையேடு உருவாக்கியதன் காரணம் குறித்துகுறிப்பிடுகையில், பன்மொழிகள் பயிலப்படும் இன்றைய மொழிசூழலில் பல சொற்களுக்கும்- தொடர்களுக்கும் தமிழ்சொல்லாட்சிகளும்- தொடராட்சிகளும் இன்றியமையாத தேவையாகஉள்ளன. இந்த தற்காலிக தேவையை கருதியே இந்த கையேடுஉருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். தமிழ் மொழிவளக்குழுவினர் இந்த கையேடு தொடர்ந்து காலத்திற்கேற்ப விரிவுபடுத்தபடும் என்றும் சொல்வளக் கலைகளஞ்சியத்தில் மேலும் புதியவார்த்தைகள் இணைக்கப்படும் என்றும் அதற்கான பணிகள்தொய்வின்றி தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.இந்த பணியில் தேசிய மரபுடைமை இயக்கம் மற்றும் உமறுப்புலவர்தமிழ் மொழி நிலையத்தினை சேர்ந்தவர்களும் தங்களது பங்களிப்பைஅளித்துள்ளனர். இந்த கையேட்டில் ஆங்கில அகர வரிசை சொற்கள் தவிரஅரசாங்க அமைப்புகள் சார்ந்த பெயர் தொகுப்பு    கல்வியியல் சார்ந்தசொற்கள் தொகுப்பு மற்றும் சட்டப்பெயர் தொகுப்பு ஆகியன இடம்பெற்றுள்ளன.   தமிழை தலை மேல் வைத்து கொண்டாடும் சிங்கப்பூர் அரசையும்,சொல்வளக் கையேடு உருவாக்கும் முயற்சியில் தங்களது ஊண்உறக்கம் மறந்து உழைத்த நல்ல உள்ளங்களுக்கும் நமது ஹலோஆசியா இதழ் சார்பிலும் வாசகர்களாகிய உங்கள் சார்பிலும்நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். நீங்களும்தனிப்பட்ட முறையில் வாழ்த்தலாமே.  

Read more

மக்கள் விரும்பிய மாற்றம் இது

Leadership is not a position or a title, it is a action and example. போரூரில் சாலையில் வைத்து இளைஞர்களைத் தாக்கிய விவகாரம் தொடர்பாக காவல் ஆணையர் உத்தரவின்

Read more

சிலுவை சுமந்த தமிழுக்கு மரியாதை எப்போது?- இளம்பரிதி

உலகில் மொழி காக்க முதன் முதலில் மாபெரும் மக்கள்யுத்தத்தை நடத்தியது தமிழர்கள். மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டஇந்த போராட்டத்தில் சுமார் 480 பேர் உயிர் பலியான வரலாறும்தமிழுக்கு தான்  உண்டு. இத்தகைய தியாகங்களை தாய் மொழிதமிழுக்காக செய்திருந்தாலும் உலக தாய் மொழி தினமாக ஐக்கியநாடுகள் சபை அறிவித்து இருப்பது உருது மொழியை எதிர்த்துவங்காளிகள் நடத்திய போராட்டத்தில் உயரி தியாகம் செய்த நாளைதான். என்ன இது கொடுமை சிலுவை சுமந்தது தமிழர்கள் கிரீடம்சுமப்பது வங்காளிகளா என மனது கொதிக்கிறதா? உண்மை தான்.கீழடி நாகரிகம் மட்டுமல்ல மொழிப்போராட்டம் கூட மறைக்கப்பட்டுதான் வருகிறது.     இதோ நமது போராட்டம் மறக்கப்பட்ட கதையை அறிந்துகொள்ளுங்கள். அரசு அதிகாரத்தின் உதவியுடன் தமிழர்களின் மேல் ஏறி சவாரிசெய்ய முனைந்த இந்தி திணிப்பை எதிர்த்தும்- தமிழ் மொழியைக்காப்பதன் மூலம் நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை காக்கநடந்த இந்த போராட்டம் 1960-களில்தான் உச்சத்தை எட்டியது. ஆனால்இதன் முதற்கட்ட போராட்டம் 1930-களிலேயே தொடங்கிவிட்டது.அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதாக 21-4-1938 அன்று ராஜாஜி தலைமை யிலான சென்னை மாகாண அரசுஅரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து பெரியார், மறைமலைஅடிகளார், சோமசுந்தர பாரதியார் உள்ளிட்டோர் வழிகாட்டுதலில்போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டோர் சிறைகளில்அடைக்கப்பட்டனர். இளைஞர்கள் பலர் தாய் தமிழ் மொழி காக்க பெரும் போர் புரிந்தனர்உயர்நிலைப் பள்ளிகளுக்கு முன்பாக இந்தி எதிப்பு மறியல்போராட்டம் நடைபெற்றன.அப்போராட்டத்தில் பங்கேற்ற மொழிப்போர்தியாகி நடராசன் – தாளமுத்து உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து, தமிழ் மொழியுணர்வால்உந்தப்பட்டு போராட்டக் களத்துக்குச் சென்ற நடராசன்தான் மொழிப்போராட்டத்தின் முதல் களப் பலி. அவரைத் தொடர்ந்து, அதே ஆண்டுமார்ச் 12-ம் தேதி கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்து சென்னைசிறையில் உயிர் நீத்தார். இந்த இரண்டு உயிர் பலிகளால் போராட்டம் மேலும்தீவிரமடையவே, இந்தி பயிற்று மொழி தொடர்பான அரசாணையை21-2-1940 அன்று அரசு திரும்பப் பெற்றது. அடுத்து, 1948-ல் ஓமந்தூரார்முதல்வராக இருந்தபோது இந்தி கட்டாய பாடமாக்கப்படும் எனஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து மீண்டும் கிளர்ச்சிஏற்பட்டதால், அரசு பின்வாங்கியது. மேலும், இந்தி பேசாத மக்கள்விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடரும் என்றநேருவின் உறுதிமொழியால் போராட்டம் சற்று ஓய்ந்தது. இந்நிலையில், 26-1-1965 அன்று முதல் இந்திய ஆட்சி மொழியாகஇந்தி மட்டுமே இருக்கும் என்ற 1963-ம் ஆண்டின் ஆட்சி மொழி சட்டமசோதாவால் மீண்டும் போராட்டம் உருவானது. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த திமுக தொண்டர்சின்னசாமி, இந்தி மட்டும் ஆட்சி மொழியாக அரியணையில்அமர்வதைத் தடுத்தாக வேண்டும் என்று தீக்குளித்து மாண்டார். சின்னசாமியின் மரணம் அரசியல் எல்லையைக் கடந்து எல்லாதரப்பினரையும் எழுச்சியூட்டியது. இதை தொடர்ந்து நடந்த பல்வேறுபோராட்டங்களில் தீக்குளித்தும்- விஷம் அருந்தியும்- போலீஸ்நடத்திய துப்பாக்கி சூட்டில் குண்டடி பட்டும் நூற்றுக்கணக்கானோர்இறந்தனர். மொத்தத்தில் இந்த மூன்று கட்ட போராட்டங்களிலும்சுமார் 480 பேர் இறந்தததாக மொழிப்போர் வரலாறு சொல்கிறது.     ஆனால் வங்களாளிகளின் உருது மொழி போராட்டம் 1952ல் தான்தொடங்கியது. பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த கிழக்குவங்கத்தில் உருது திணிப்பை எதிர்த்து இந்த போராட்டம் நடந்தது. உருது மொழி திணிப்பை எதிர்த்து 1952 பிப்ரவரி 21ல் டாக்காபல்கலைக்கழகம் முன்பு வங்காளி மொழியை தாய் மொழியாககொண்ட  மாணவர்கள் போராட்டம் நடத்திய போது அந்நாட்டுஅரசின் காவல்படையின் துப்பாக்கி குண்டுக்கு பலியாகினர். 1971ல்வங்கதேசம் உருவானதும், அந்நாட்டு அரசு முதல் வேலையாக பெருமுயற்சி செய்து மொழிக்காக உயிர் தியாகம் செய்த தன்நாட்டுமாணவர்களின் தியாகத்திற்கு சர்வதேச மரியாதை பெற்றுதருவதற்காக ஐக்கிய நாடுகள் சபையில்விண்ணப்பித்து பிப்ரவரி 21ஐ உலக தாய்மொழி தினமாக அறிவிக்க செய்தனர். இதை தொடர்ந்து ஒரே வகை போராட்டத்தில் காலத்தால் முந்தியதுடன் நீண்ட காலமாகநடத்தப்பட்டு நிறைய உயிரிழப்பை சந்தித்து நடந்த போராட்டத்துக்கு உரிய மதிப்புகிடைக்கவில்லை என்ற ஏக்கம் தமிழகத்தின் மொழிப்போரில் பங்கேற்ற மொழிப்போர்வீரர்களுக்கும் தமிழறிஞர்களுக்கு நீண்ட நாட்களாக உள்ளது. இந்த சர்வதேச தாய் மொழிதினத்தை தமிழ் மொழிப்போர் தியாகிகள் தினமான ஜனவரி 25க்கு மாற்ற வேண்டும்என்றும் அதற்கு இந்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்தமிழறிஞர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் இந்திய அரசிற்கு பலமுறைகோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மற்றொரு வரலாற்று உண்மையையும் வாசகர்கள் அறிந்து கொள்ளவேண்டும். மொழியறிஞர் வளனரசு கூறுகையில், ‘உலகின் முதல் மொழி தமிழ்’ என்றுகால்டுவெல் போன்ற  வெளிநாட்டு அறிஞர்களும், 70 மொழிகளை அறிந்த இலங்கைஅறிஞர் நல்லூர் ஞானப்பிரகாசரும், 27 திராவிட மொழிகளையும் அறிந்தசங்கரன்கோவிலை சேர்ந்த தேவநேயப் பாவாணரும் இன்னும் பல்லறிஞர்களும்உறுதிப்படுத்தி உள்ளனர். விவிலியத்திலேயே அதற்கு சான்று உள்ளது. பாபேல் கோபுரம்கட்டியபோது உலகில் ஒரே மொழி இருந்தது. அது கிழக்கில் தோன்றிய மொழி. சினேயாஆற்றுப்படுகையில் (சிற்றாறு) வசித்த மக்களின் மொழி என்று உள்ளது. இதை உறுதிபடுத்தும் வகையில் சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிமாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவில் தமிழ் பழமையானதொன்மையா மொழி மற்றும் சமஸ்கிருதத்திற்கும் மூத்த மொழி என்று கூறினார். இதுமட்டுமில்லை நரேந்திர மோடி கடந்த வருடம் இஸ்ரேஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம்சென்ற போது சேரமன்னனின் தமிழ் செப்பேட்டை தான் இந்தியாவின் தொன்மையைபறைசாற்றும் விதத்தில் கொடுத்தார். ஏனென்றால் தமிழை விட தொன்மையானமொழிகள் எதுவும் இந்தியாவில் ஏன் உலகத்திலேயே இல்லை. அதிலும் உயிரோடோமக்களின் பயன்பாட்டிலோ இல்லை. தமிழ் மூத்த மொழி- தொன்மையான மொழி என்று நமக்கு மிட்டாய் கொடுக்கும் மோடிஇந்தி திணிப்பை மட்டும் கைவிட மாட்டார் என்பது நிச்சயம்.     இந்நிலையில் சர்வதேச தாய் மொழி தினத்தை தமிழ் மொழிப் போராட்டட நினைவுநாளில் மாற்றுவதற்கு தமிழர்களின் கோரிக்கையும் தொன்மை சிறப்புடனேயே மத்தியஅரசின் அலுவலகங்களில் தூங்கிறது என்பது தான் இன்றைய கள நிலவரம். என்றைக்கு தமிழனின் கோரிக்கைக்கு இந்திய அரசு செவி கொடுத்து இருக்கிறது? இந்தகோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்க. சிலுவைகளை தமிழர்கள் சுமக்க கிரீடத்தை மற்றும் வங்காள மொழி கைப்பற்றியதுஎன்ன நியாயம். நியாயமாரேரேரேரேரேரேரே……………………… பதில் சொல்லுங்கள்.

Read more

லோகம் நாசமா போச்சுடா அம்பி

லோகம் நாசமா போச்சுடா அம்பி   இந்த வீடியோவை பார்த்த உடனே என் தாத்தா இதை தான் சொன்னார். இப்படி எல்லாம் ஒரு மருந்தை கண்டுபிடிப்பானுங்கன்னு நான் கனவில் கூட நினைத்து பார்த்தது

Read more

தமிழர்கள் திராவிடர்களே …..!

தமிழர்கள் திராவிடர்களே …………….! கணேஷ் பத்மநாபன்- சிறப்பு செய்தியாளர் ”திராவிடம் என்பது கிறித்தவ மதத்தை பரப்ப வந்த திரு. கார்டுவெல் அவர்கள் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூல் எழுதிய பின் திராவிடம்

Read more

“திரு.சகாயம் அவர்கள் வணக்கம் ஏசியாவோடு”

-முத்துக்கண்ணன், சிறப்புச் செய்தியாளர். கனடாவிலிருந்து வெளிவரும் “வணக்கம் ஏசியா” மாத இதழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக விவசாயிகள் துயர்துடைக்க கனடாவில் நிதி திரட்டும் நிகழ்ச்சியை வெற்றிகரமாக எட்மண்டன் மற்றும் கால்கேரி

Read more