கார்த்திகை மாதம் ராசி பலன்கள்

மேஷம்:
அசுவினி நட்சத்திர அன்பர்களுக்கு நட்சத்திர அதிபனின் பலமும், பரணி நட்சத்திர வாசக அன்பர்களுக்கு உங்களின் நட்சத்திர அதிபனின் திரிகோணமும், கார்த்திகை நட்சத்திர அன்பர்களுக்கு ராகுவின் திரிகோணமும் அனுகூலமான பலன்களை வழங்கும் மாதம். ஒரு சில கார்த்திகை நட்சத்திர அன்பர்களுக்கு அவர்களது தசாபுத்திக்கு ஏற்ப சிற்சில பிரச்சினைகள் வரலாம். எனவே வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். ராசியான தேதிகள்: நவம்பர்: 17-22, 26-29, டிசம்பர்: 2-5, 11-14.
ர்pஷபம்:
மாத தொடக்கத்திலேயே இந்த ராசிகாரர்களுக்கு மகரம், கன்னி, மிதுனம் ராசி அன்பர்களால் நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த, ஒரு நல்ல செய்தி உங்கள் இல்லம் தேடி வரும். இந்த மாதம் கொஞ்சம் போட்டிகள் இருக்கும். குரு அருளால் அனைத்தும் நல்லபடியாகவே முடியும். இந்த மாதம் சந்தோஷமாக தொடங்கி அதிர்ஷ்டகரமாக முடியும். ராசியான தேதிகள்: நவம்பர்: 19-22, 27-29, டிசம்பர்: 2.4,7,8,11, 13,14.
மிதுனம்:
இதுவரை நிலவி வந்த இறுக்கமான சூழல் நவம்பர் 22 தேதிக்கு பிறகு மாறும். மாற்று மத, இன, மொழி நண்பர்களால் உங்கள் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு வரும். உங்களுக்கான உயர்விற்கு எத்தனை வழிகள் உள்ளன என்று நீங்களே உணர்ந்து கொள்ளும் வாய்ப்புகள் இந்த மாதம் உங்கள் இல்லம் தேடி வரும். ராசியான தேதிகள்: நவம்பர்: 22-26, 29, டிசம்பர்: 2,6,7,10,11-14.
கடகம்:
இந்த ராசியை சேர்ந்த 80 சதவீதம் பேருக்கு இந்த மாதம் ஏதோ ஒரு விதத்தில் உயர்வோ, அதிர்ஷ்ட்ட வாய்ப்புகளோ உங்கள் கதவை தட்டும் மாதம் இது. தசாபுத்தி பாதகமாக உள்ளவர்களுக்கு நற்பலன்களுக்கு உத்திரவாதம் மட்டுமே கிடைக்கும். அதன் பலன் கைகளுக்கு வர சற்று தாமதமாகும். ராசியான தேதிகள்: நவம்பர் 19-23, 26-30, டிசம்பர்: 2,5,8-11, 13.
சிம்மம்:
எல்லாமே நன்மையாக நடந்தாலும் ஒரு இனம் புரியாத பிரச்சினைகள் மனதை வாட்டும் அல்லது எதிர்பாராத இடத்தில் இருந்து ஒரு சிறு பிரச்சினையாவது வந்து வாசலில் நிற்கும். எனவே யாரையும் அலட்சியமாக நினைத்து வம்பை வரவழைக்க வேண்டாம். ராசியான தேதிகள்: நவம்பர்: 19,21,23,25-28, டிசம்பர்:1-3,6,9,11-14.
கன்னி:
மாததொடக்கத்திலேயே வெற்றி ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சூரியன், சனி கூட்டணி உங்களுக்கு மிகப்பெரிய மன தைரியத்தை தரும். இந்த மாதத்தில் நீங்கள் பெரும் வெற்றிகளை நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம். ஆனால் பணம் கைக்கு வரும் முன் யாருக்கும் வாக்குறுதி மட்டும் கொடுக்க வேண்டாம். தந்தையுடன் சற்று முரண்பாடுகள் தோன்ற வாய்பிருக்கிறது. ராசியான தேதிகள்: நவம்பர்: 18-23, 26, 28-30, டிசம்பர்: 2,5,8,11,13,15.
துலாம்:
இந்த ராசியில் உள்ள 39-46 வயதிற்குள் உள்ள அனைவரும் ஏதோ ஒரு நல்ல நன்மையை அனுபவிப்பீர்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் உங்கள் கர்மவினை உங்களுக்கான நன்மைகளை தடுக்கிறது என்பதை புரிந்து கொண்டு உங்களது சுயஜாதகத்தினை பார்த்து தக்க பரிகாரம் செய்து கொள்ளுங்கள். குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்ளுங்கள். ராசியான தேதிகள்: நவம்பர்: 17-20, 22-26, 29, டிசம்பர்: 3,5,7,11,14,15.
விருச்சிகம்:
கடந்த காலங்களில் முட்டுக்கட்டையாக இருந்த சில காரியங்களில் சிறிது முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலரை தவிர மற்றவர்கள் முழு வெற்றி பெற சற்று காத்திருக்க வேண்டும். விசாக நட்சத்திர வாசகர்கள் மட்டும் அலைச்சல்களுடன் கூடிய நன்மையை பெறலாம். குடும்ப பிரச்சினைகள் சில தலைதூக்கும். கவனம். ராசியான தேதிகள்: நவம்பர்: 19-23, 25,27-29, டிசம்பர்: 1,4-6,9,11-14.
தனுசு:
இந்த மாதம் இந்த ராசியை சேர்ந்த பலருக்கும் பெரும் அலைச்சல்கள் ஏற்படும். ஆனால் அதற்குரிய பலன் என்னவோ இந்த மாதத்தின் கடைசியில் அதாவது டிசம்பர் 8ம் தேதிக்கு பிறகு தான் கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் நிச்சயம் இந்த மாதம் கிடைக்கும். ஓரு சிலருக்கு ஆர்பரிக்கும்படியான வாய்ப்புகள் கிடைக்கும். ராசியான தேதிகள்: நவம்பர்: 16-19,21-23, 25,26, டிசம்பர்: 2,4,5, 7,11, 13,14.
மகரம்:
பல நன்மைகளுக்கான தொடக்கம் இந்த மாதம் ஏற்படும். இதற்கான பலனை போக போக அனுபவிப்பீர்கள். ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் விரும்பியவாறு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். ராசியான தேதிகள்: நவம்பர்: 16-19, 21,23,25,29, டிசம்பர்: 2,4,5,11-14.
கும்பம்:
நன்மைகள் நடந்தாலும் மன சஞ்சலங்களுக்கும் குறைவிருக்காது. எனவே எந்த விசயமாக இருந்தாலும் உணர்ச்சி வேகத்திலோ, அவசரப்பட்டோ எடுக்காமல் உங்களது நலம்விரும்பியை கலந்து ஆலோசித்து முடிவெடுத்தால் நடைபெற உள்ள நன்மைகளை அனுபவிக்கலாம். ராசியான தேதிகள்: நவம்பர்: 16,19-23, 25,28,29, டிசம்பர்: 1,2,6,7,9,11,14,15.
மீனம்:
இதுவரை உங்களுக்கு தெரிந்ததோ தெரியாமலோ நடந்த தவறுக்கு இந்த மாதம் நீங்கள் பொறுப்பேற்க வேண்டி வரும். எனவே எதையும் நிதானமாகவே அணுகவும். இதற்கான பலனை மெல்ல மெல்ல மீட்டு எடுப்பீர்கள். எனவே எதிலும் அகல கால் வேண்டாம். ராசியான தேதிகள்: நவம்பர்: 17-20, 22-25, 28,29, டிசம்பர்: 1,6,7,11,13.