நானே ராஜா- நானே மந்திரி – காலப்பயணம்

அது என்ன மாயமோ தெரியவில்லை, இந்த தீபாளிக்கு வெளிவந்த இரண்டு பெரிய கதாநாயகர்களின்( கொடி மற்றும் காஷ்மோரா) படமும் இரட்டை வேடங்களை கொண்ட படமாகவே அமைந்துள்ளது. ஆனால் இரண்டுமே மொக்கையாகவே வந்துள்ளதும் அபூர்வமான ஒற்றுமையாக அமைந்துள்ளது. இந்த நேரத்தில் நமது கதாநாயகர்கள் பலரும் இரட்;டை வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வெள்ளிதிரையில் வெற்றிகரமாக ஓடிய படங்களின் தொகுப்பை உங்களுக்கு வழங்கி உங்களை மலரும் நினைவுகளில் முழ்கடிக்க முடிவு செய்து இந்த பக்கத்தை உருவாக்கி உள்ளோம்.
தற்போது மாஸ் ஹ{ரோவாக உள்ள அஜுத்தை இப்போது, வாய் பேச முடியாத- காது கேட்க இயலாத கதாபாத்திரத்தில் நினைத்துப் பார்க்க முடியுமா?. நிச்சயம் முடியாது. ஆனால் அஜீத்திற்கு அப்படி ஒரு கேரக்டர் தான் ஒரு நட்சத்திர அந்தஸ்த்தை உருவாக்கியது என்பது தான் நம்ப முடியாத முரண்தொகை. அந்த படம் தான் வாலி. இதில் வாய் பேச முடியாத- காது கேட்பாத கேரக்டத் தான் ‘தல’யின் அவதாரம். ராமாயண கிளைக்கதை ஒன்றை அடிப்படையாக கொண்ட வாலியில் அஜித்துக்கு இரண்டு வேடங்கள். அண்ணன் ஜீவா- தம்பி சிவா இருவரில் தம்பி சிவா, கதாநாயகி சிம்ரனை துரத்தி துரத்தி காதலித்துக் கொண்டிருக்க, அண்ணன் ஜீவாவும் சிம்ரனை ஒரு தலையாக காதலிப்பார். ஆனால் கல்யாணம் தம்பி சிவாவுடன் நடந்துவிட தனக்குள்ளேயே பொருமிக் கொண்டு ஒரு வில்லனாக சிம்ரனை பலவந்தமாக விரட்டி விரட்டி வெரைட்டி விருந்து வைத்திருப்பார் அஜுத். இது அஜீத் ரசிகர்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் கவர்ந்து வெள்ளிதிரையில் வெள்ளி விழா கண்டது.

சூப்பர்ஸ்டாரின் சூப்பர் ஹிட் படமான ‘ராஜாதி ராஜா’வின் சாயல் கொண்டது கத்தி. அப்படியே பின்னால் போனால், போக்கிரி ராஜாவனி; அடுத்த வெர்சன் தான் ராஜாதி ராஜா எனவும் சொல்லலாம். ரொம்ப நல்லவன், ஆனால் வம்பு சண்டைக்கு போகாத ஒரு ஹீரோ. தப்பான ரூட்டில் செல்லும் கொஞ்சம் நல்லவன் ஆனால் அதிரடி ஆக்ஷன் அவதாரமாக இன்னொரு ஹீரோ. முழு நல்லவனுக்கு ஒரு சிக்கல் என்றதும் பாதி நல்லவனாக ஆக்ஷன் ஹீரோ களத்தில் இறங்கி முழு நல்லவனை காப்பாற்றுவது தான் திரைக்கதை. கத்தி என்கிற கதிரேசனும், ஜீவா என்கிற ஜீவானந்தமும் இளைய தளபதி விஜய்யின் திரைஉலக கேரியரில் ஏற்றியது சாதாரண விளக்கு அல்ல அது பவர்ஃபுல் சோடியம் ஆவி விள்க்கு என்பது தமிழ் கூறும் நல்லுலகில் அனைவருக்கும் தெரிந்த ரகசியம் தான்.

அமைதிப்படை:
ஒரு படத்தின் ஹீரோ “வெயிடட்ட்டடா” தெரிய வேண்டுமென்றால் வில்லன் ‘அபப்ப்ப்ப்படி'( இதை ரஜினி ஸ்டைலில் படிக்கவும்) இருக்க வேண்டும் என்பார்கள் சினிமா தொழில் நுட்பம் தெரிந்தவர்கள். அபப்ப்ப்படி ஒரு வில்லனாகவும், அவரை வெல்லும் ஹீரோவாகவும் ஒருவரே இரு வேடம் ஏற்று நடித்து அப்ப்ப்படி ஒரு அதிரடி ஆட்டம் “ அமைதிப்படை” யில் ஆடியிருப்பார் சத்யராஜ். “அமைதிபப்படை” அமாவாசையை மறந்து தமிழ் சினிமாவின் இரட்டை வேட அதிரடி ஆட்டததையே எழுத முடியாது என்னும் அளவிற்காக அதகளம் மற்றும் ரணகளமான படம் அமைதிப்படை. பெயரில் அமைதி இருந்தாலும் வெற்றியிலும், வசூலிலும் “ அதிரடிப்படை” தான்.

இந்தியன்:
வயதான ரோல் என்றால் நரைத்தமுடி விக், சோடா புட்டி கண்ணாடி என்று இருந்த காலத்தில் அமெரிக்க மேக்கப்மேனை வரவைத்து வயதான மேக்கப் போட்டு பார்த்த அனைவரையும் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்க ஆச்சரியப்பட வைத்த படம் “இந்தியன்:. எதுவாக இருந்தாலும் நேர்வழி என்பார் அப்பா. எல்லாவற்றுக்கும் ஷார்ட் கட் கண்டுபிடிப்பார் மகன். இந்த வித்தியாசங்களை வெளிக்காட்ட கமலை விட்டால் வேறு யாரால் முடியும்? மேக்கப்பிலும், மேக்கிங்கிலும் வித்தியாசம் காட்டி பெரும் வெற்றி பெற்ற படம்.

நெற்றிகண்;:
1981 இல் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த படம் நெற்றிக்கண். காலையில் கண்களை திறக்கும் போதே அங்கு பெண்ணின் படம் இருக்கவேண்டும் என நினைக்கும் சபலப்புத்தி பணக்காரர் சக்கரவர்த்தி. அசால்ட்டான அதே சமயம் திமிரான அந்த மேனரிசம் சான்ஸே இல்லை.அவருடைய மகன் சந்தோஷ். ஆனால் மகன் ரஜினிக்கு சும்மா வந்து போகும் கதாபாத்திரம் தான். முழுக்க முழுக்க அப்பா ரஜினியே அதிரடி நடிப்பால்; அள்ளியிருப்பார். டிராமா டிக்கெட் விற்க வரும் பெண்ணை சந்திக்கும் முன் சென்ட் அடித்துக் கொள்வது, மீசையை சரி செய்து கொள்வது என அந்த பெண்ணை இம்ப்ரெஸ் செய்ய தயாராகும் அந்த சீனில் ரஜினியின் அந்த ஸ்டைல் வேற வேற அதுக்கும் மேல லெவல்.

உழவன் மகன்:
விவசாயி மற்றும் நவநாகரீக படடணத்து இளைஞன் என மாறுப்பட்ட பாத்திரத்தில் விஜயகாந்த் நடித்து பார்த்தவர்களை திணறடித்த படம் உழவன் மகன். “ உன்னை தினம் தேடும் தலைவன்” என்ற பாடல் மூலம் பலரும் அவரை தேடி வரும் அளவிற்கு வளர்ச்சி அடைந்தார்.

சூரியவம்சம்:
சரத்குமார் ஏராளமான இரட்டை வேட படங்களில் நடித்து இருந்தாலும், சூரிய வம்சம் பெற்ற வெற்றியை வேறு எதுவும் பெற வில்லை. “நாட்டாமை” படமும் இவரது இரட்டை வேட படங்களில் குறிப்பிட தக்க படமாக அமைந்தது.

வானத்தைபோல:
இதில் விஜயகாந்தின் அண்ணன் கதாபாத்திரம் பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்து வெற்றியை ருசித்தது. இதுவே பின்னாளி;ல் விஜயகாந்தை வைத்து பல கிண்டல் மீம்ஸ்களுக்கும் காரணமாக அமைந்தது குறிப்பிட்த்க்கது.

பேரழகன்:
நடிகர் சூர்யா கூன் விழுந்த முதுகோடும், அழகான தோற்றத்தோடும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.அவைகள் ஒருவர் படம் முழுக்க இரண்டு கேரக்டர்களாக வாழ்ந்த படங்கள். ஒரே கேரக்டர் சூழ்நிலை சந்தர்ப்பம் காரணமாக இரு வேரு நபர்கள் போல் நடிப்பதாக வந்த படங்களும் வசூலில் பட்டையை கிளப்பியது. அதில் முதல் இடம் ரஜினியின்” தில்லு முள்ளு” விற்கு தான்.

தில்லு- முள்ளு:
அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் இந்த பெயரை கேட்டாலே சிரிக்காதவர்களும் சிரித்து விடுவார்;கள். மீசை இருந்தால் இந்திரன்- மீசை இல்லாவிட்டால் சந்திரன் என்ற சிம்பிள் பார்முலாவில் பட்டையயை கிளப்பிய படம். படம் வந்து குறைந்தது 35 வருடங்கள் ஆகி இருக்கும். இப்போது வாய்ப்பு கிடைத்தாலும் இந்த படத்தினை பாருங்கள். நான் ஸ்டாப் சிரிப்பிற்கு நாங்கள் கியாரண்டி.

அவ்வை சண்முகி:
சூப்பர் ஸ்டாருக்கு ஒரு “ தில்லு-முள்ளு” என்றால், உலக நாயகனுக்கு ஒரு “ அவ்வை சண்முகி”. இதிலும் அதே தான் ஒட்டு மீசை வைத்தால் ஸ்டண்ட் நடிகர் பாண்டியன். மீசை இல்லாவிட்டால் அவ்வை சண்முகி.
இந்த படங்கள் எல்லாம் உங்களையும், என்னையும் ரசிக்க வைத்து மகிழ வைத்த படங்கள். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் ஒரு முறை பாருங்கள். அந்த படத்தினை முதன் முதலில் பார்த்த காலத்திற்கே உங்களை அழைத்து செல்லும். இது தான் சினிமாவின் வலிமை.