யாழ் உடுவில் பரவும் டெங்கு – பீதியில் மக்கள்

வட இலங்கை யாழ். உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணி மனைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் தீவரமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிசிக்சைக்காக வைத்திய சாலைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ். உடுவில் மற்றும் இணுவில் கிழக்கு பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய பணிமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான காரணம் குறித்து கூறுகையில், தற்போது பருவ மழை காலம் என்பதால் இந்த மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை முன்னரை விடப் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் டெங்கு நோய் பரப்பும் காரணிகளிடம் இருந்து தொலைவாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள பிளாஸ்டிக், பாலித்தீன் மற்றும் நீர் தேங்கக் கூடிய பொருட்களைப் வீதிகளிலோ, பொதுவிடங்களிலோ வீசுவதைத் தவிர்த்து பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். அத்துடன், ஒருவர் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்குச் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும்” வைத்தியசாலை அதிகாரிகள் அறிவுறுத்ததி உள்ளனர்.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த சித்த வைத்தியர் இளம்பரிதி, டெங்கு காய்ச்சலுக்கான வீட்டு மருத்துவம் குறித்து கூறுகையில், “ டெங்கு காய்ச்சல் ஏ.டி.எஸ். என்னும் கொசு கடிப்பதால் ஏற்படுகிறது. இந்த கொசு பகலில் தான் கடிக்கும். அந்த கொசுவால் தரையில் இருந்து 45 செமீக்குள் தான் பறக்க முடியும். எனவே பருவமழை பெய்யக்கூடிய பகுதியில் உள்ள அனைவரும் தேங்காய் எண்ணெய்யை தங்களது முழங்கால் வரை தேய்த்து கொண்டால் டெங்கு நோய் பரப்பும் கொசுவின் கடியில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

மேலும், நிலவேம்பு குடிநீர் வைத்து காலை, மாலை இரு வேளையும் 150 மிலி ஒரு வார காலத்திற்கு அருந்தினால் டெங்கு நோய் வராது. ஏற்கனவே டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரத்ததட்டுகளை அதிகப்படுத்த பப்பாளி இலையினை நறுக்கி சாறு எடுத்து காலை, மாலை ஒரு 100 மிலி மட்டும் அருந்தினால் ரத்தத்தட்டுகள் அதிகரித்து டெங்கு பாதிப்பில் இருந்து மீளலாம். அதே சமயத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஆங்கில அலோபதி மருத்துவத்தில் மருந்து இல்லை என்பதை உணர்ந்து சித்த மருந்துகளை மட்டும் எடுத்து கொள்ளவும். அல்பெர்ட்டா வாழ் தமிழ் மக்கள், இலங்கையில் உள்ள உங்களது உறவுகள் யாரேனும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு இருந்தால் மேற்கண்ட மருந்தை அவர்களுக்கு எடுத்து கூறி அவர்களது உயிரை காக்கவும்.

பேருந்து வசதிகள் தேவை- மக்கள் கோரிக்கை

வருகிற ஜனவரி மாதம் முதல் காலை 7.30 மணிக்குப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து கிராமப்புறப் பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்து வசதிக்காக, காலை நேரத்தில் கூடுதலான பஸ் சேவைகளைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று, கிராமப்புற பகுதியை சேர்ந்த பெற்றோர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர்கள் கூறுகையில், “ ஏற்கனவே நாள்தோறும் மாணவர்கள், ஐந்து கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். இந்நிலையில் பாடசாலையினை அதிகாiலையிலேயே ஆரம்பிப்பது என்றால், மாணவர்களுக்கு ஏற்ற வகையில் போக்குவரத்து செய்யக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். ஏனென்றால் கடந்த காலங்களில் தமிழர் பகுதியில் உள்ள கிராமங்களுக்கான பஸ் சேவைகளை நடத்துங்கள் என, தொடர்ச்சியாக தமிழ் மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன” என்று கிராமப்புற பெற்றோர்கள் புலம்;புகின்றனர்.
இது குறித்து கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் குறிப்பிடுகையில் “; நேரத்துடன் பாடசாலையினைத் தொடங்கும்போது முதலில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு குறித்த நேரத்தில் வருகை தரக்கூடிய வகையில், பஸ் சேவைகளை நடத்துங்கள். குறிப்பாக கிளிநொச்சியின் அக்கராயன், பூநகரி, கண்டாவளையின் கல்லாறு, வட்டக்கச்சி போன்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், பஸ் வசதிகள் இல்லாததன் காரணமாக, நீண்டதூரம் பாடசாலைகளுக்கு நடந்து செல்கின்றனர். எனவே மாணவர்களின் போக்குவரத்துக்கு ஏற்ற முன் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுகின்றோம். அவ்வாறு, தேவையான போக்குவரத்து வசதிகள் இருக்கும் பட்சத்தில் பாடசாலைகளை நேரத்துடன் ஆரம்பிப்பதில் பெற்றோர்கள் யாரும் எதிர்க்கமாட்டார்கள்” என தெரிவிக்கின்றனர்.

எனவே கனடா வாழ் தமிழர்கள் சார்பில் நமது பிள்ளைகளின் கல்விக்கு ஏதுவான போக்குவரத்து வசதிகளை இலங்கை அரசு செய்து தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். ஏனென்றால் நம் தமிழ் மூதாட்டி ஒளவை கூறியிருக்கிறார், “கற்கை நன்றே கற்கை நன்றே… பிச்சைபுகினும் கற்கை நன்றே”.