குருப்பெயர்ச்சி பலன்கள் 02-.09.-17 முதல் 02-.10.-2018 வரை

கடந்த 02.09.2017 ஞான கிரகமான வியாழபகவான் எனும் குருபகவான் கன்னி ராசியிலிருந்து சர வீடான துலாம் ராசிக்குள் சென்று அமர்ந்திருக்கிறார். 02.10.2018 வரை இங்கே அமர்ந்து தன் அதிகாரத்தை வெளிப்படுத்துவார். இந்தக் குருபெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் ஒரு விதமான பலனை கொடுக்கும். அதனை ராசிப்படி பார்ப்போம்.


இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து இருந்த குரு பகவான், 02.10.2018 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் இருக்கும் காலத்தில் உங்கள் மனதில் தெளிவு பிறக்கும். நினைத்ததை நினைத்தபடி முடித்துக் காட்டுவீர்கள்.
கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதி கரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். குடும்பத் தினரின் ஆசையை பூர்த்தி செய்யுமளவுக்குப் பணவரவு அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைக்கும். சொந்த வீட்டுக் கனவு நிறைவேறும். வீட்டில் தடைபட்ட விசேஷங்களெல்லாம் நடக்கும். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். 3-ம் வீட்டைக் குரு பார்ப்பதால் பதவி, பட்டம் பெறுவீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கோயில் திருவிழாக்களில் மரியாதை கிடைக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவ முன்வருவார்கள். குருபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் தொட்ட காரியம் துலங்கும். திட்டவட்டமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.  வியாபாரத்தை விரிவுபடுத்த புது உத்திகளைக் கையாள்வீர்கள். படித்த அனுபவமுள்ள வேலையாட்களைக் கூடுதலாக நியமிப்பீர்கள். பங்கு தாரர்கள் பணிந்து வருவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இந்தக் குருபெயர்ச்சி உங்களை உச்சிக்கு கொண்டு வருவதுடன் எதிலும் நிம்மதியையும் வெற்றியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அவித்த வேர்க்கடலை தானமாகக் கொடுங்கள். நினைத்தது நிறைவேறும்.

 


குரு பகவான் 02.10.2018 வரை உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் அமர்ந்து பலன் தருவார்.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அதிகம் போராட வேண்டி வரும். கணவன் மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உடல் நலத்தில் அதிகம் அக்கறை தேவை. பேச்சில் ஒரு கம்பீரம் பிறக்கும். இழுபறியான வேலை களை விரைந்து முடிப்பீர்கள். வர வேண்டிய பண மெல்லாம் கைக்கு வரும்.
வருங்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்று நடப்பார்கள். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலை கிடைக்கும். அறக்கட்டளை, சங்கம் தொடங்குவீர்கள். பணப் பற்றாக்குறையால் நின்றுபோன கட்டிட வேலைகள் முடியும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் வீண் செலவுகளையெல்லாம் கட்டுப்படுத்துவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெகுகாலமாகப் போக நினைத்தும் முடியாமலிருந்த குலதெய்வக் கோயிலுக்கு இப்பொழுது சென்று வருவீர்கள்.
வியாபாரத்தில் வருட பிற்பகுதியில் புது முதலீடுகள் செய்யலாம். உத்தியோகத்தில் அதிகச் சம்பளத்துடன் கூடிய பதவி உயர்வு உங்களைத் தேடி வரும். என் றாலும் பல வேலைகளை நீங்களே பார்க்க வேண்டி வரும். ஆனால், மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். இந்தக் குரு மாற்றம் முதல் முயற்சியில் உங்களை அலைக்கழித்தாலும் இரண்டாவது முயற்சியில் வெற்றியைத் தரும்.

பரிகாரம்: பௌர்ணமி திதி நாளில் கோயிலுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பச்சரிசி தானமாகக் கொடுங்கள். தடை நீங்கி வெற்றி கிட்டும்.


குரு பகவான் 02.10.2018 வரை 5-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறார்.
திறமை இருந்தும் முடங்கிக் கிடந்த உங்களுக்கு எதிலும் வெற்றி கிட்டும். வீட்டில் சந்தோஷம் குடி கொள்ளும். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்சினைகள், பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். நீண்ட நாளாகப் புதுப்பிக்கப்படாமலிருந்த குலதெய்வக் கோயிலைச் சொந்தச் செலவில் புதுப்பிப்பதுடன், உங்களின் பிரார்த் தனைகளையும் நிறைவேற்றுவீர்கள்.
குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். சொந்தபந்த வீட்டு விசேஷங்களில் உங்களுக்கு இனி முதல் மரியாதை கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவி னர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வராமலிருந்த சொத்து கைக்கு வரும். குரு 11-வது வீட்டைப் பார்ப்பதால் கடன் பிரச்சினைகள் தீரும். வேலை யில்லாமல் தவித்தவர்களுக்குப் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வீட்டுக்கு வேண்டிய தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி ஆகியவற்றை வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் பழைய கடனைப் பைசல் செய்யும் அளவிற்கு லாபம் அதிகரிக்கும். அதிக முதலீடுகள் செய்து கடையை நவீனமாக்குவீர்கள். வாடிக்கை யாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சில மாற்றங்களைச் செய்யுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். மேலதிகாரியுடனான பனிப் போர் தீரும். நீங்கள் விரும்பிய இடத்துக்கு இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் ஒன்று சேர்வீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும்.
ஆகமொத்தம் இந்த குருப்பெயர்ச்சி சோகத்திலிருந்து உங்களை விடுவிப்பதுடன், முதல் தரமான யோகங் களையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: அமாவாசை நாளில் ரோஸ் நிறத் துணிகளைத் பக்தர்களுக்கு தானமாகக் கொடுங்கள். நினைப்பது நிறைவேறும்.


குரு பகவான் 02.10.2018 வரை உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்வதால் சேமிப்புகள் கரையும். எந்த ஒரு விஷயத்தையும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். நெடுந்தூர, இரவுநேரப் பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. நீர்,நெருப்பு, மின்சாரத்தைக் கவனமாகக் கையாளுங்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் யோசித்து முடிவெடுங்கள். குரு பகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்றிருந்த பணமெல்லாம் கைக்கு வந்து சேரும். வெளிநாட்டிலிருப்பவர்கள் தக்க சமயத்தில் உதவு வார்கள். வெளியூர்ப் பயணங்கள் சாதகமாக இருக்கும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலை யில்லாதவருக்கு வேலை கிடைக்கும். பெரிய பதவிக்குத் தேர்ந் தெடுக்கப்படுவீர்கள்.
குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சொத்து வாங்குவது விற்பதில் உஷாராக இருங்கள். அலைந்து திரிந்து சில காரியங்களை முடிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் கடையை வேறிடத்துக்கு மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாவீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களைச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். பங்குதாரர்களுடன் வளைந்து கொடுத்துப் போகவும். உத்தியோகத்தில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க நேரிடும். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராகச் சிலர் குற்றச் சாட்டுகளை வைப்பார்கள். மேலதிகாரியிடம் மனஸ் தாபங்கள் வெடிக்கும். பணியில் திடீர் இடமாற்றம் உண்டு.
இந்தக் குரு மாற்றம் உங்களைப் பொறுமை, நிதானத்தால் புகழ்பெற வைப்பதுடன், விட்டுக் கொடுக் கும் மனப்பான்மையால் வெற்றிபெறவைக்கும்.

பரிகாரம்: கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு துவரம் பருப்பைத் தானமாகக் கொடுங்கள். கவலைகள் விலகும்.


குரு பகவான் 02.10.2018 வரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்வதால் உங்களின் அணுகு முறையை மாற்றிக்கொள்வது நல்லது. எடுத்தோம் கவிழ்தோம் என்று பேசாமல் சில விஷயங்களில் சந்தர்ப்ப, சூழ்நிலை அறிந்து முடிவெடுங்கள். குடும் பத்தில் பெரியவர்களிடம் முக்கிய விஷயங்களைக் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. வெளியிடங் களிலும் நிதானமாகப் பேசுங்கள். உங்களின் ஏழாவது வீட்டைக் குரு பார்ப்பதால் வி.ஐ.பி.க்கள் அறிமுக மாவார்கள். கணவன் மனைவிக்குள் அன்பும் அன்னியோன்யமும் குறையாது. குரு பகவான் உங்களின் ஒன்பதாவது வீட்டைப் பார்ப்பதால் தேவைக்கேற்ப பணவரவு இருக்கும். பழைய கடன் பைசலாகும். ஆனால், எதிர் பாராத வகையில் செலவு, திடீர் பயணங்கள் அதி கரிக்கும். உங்கள் வசதிக்கும், அந்தஸ்துக்கும் தகுந்த மணமகன் அமைவார். குரு 11-ம் வீட்டைப். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும்.  வியாபாரத்தில் இருப்பதை வைத்து முன்னேறப் பாருங்கள். சந்தை நிலவரத்தைக் கவனத்தில் கொண்டு புது முதலீடு செய்யுங்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளைப் போராடி விற்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசி பழைய பாக்கிகளை வசூலியுங்கள். உத்தி யோகத்தில் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.  இந்தக் குரு மாற்றம் அவ்வப்போது குழப்பத்தையும் காரியத்தடைகளையும் தந்தாலும் திட்டமிட்டுச் செயல் படுவதன் மூலமாகவும் கடின உழைப்பாலும் நினைத்ததை நிறைவேற்றித் தரும்.

பரிகாரம்: மனதுக்கு பிடித்த சித்தர் படத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வணங்கி கோதுமை இனிப்புகளை தானமாகக் கொடுங்கள். நிம்மதி கிடைக்கும்.


குரு பகவான் 2.10.2018 வரை உங்கள் ராசிக்குத் தன வீடான 2-ம் வீட்டில் அமர்வதால் அடிமனதில் இருந்த போராட்டம் நீங்கும். இனி இதமாகப் பேசி சாதித்துக் காட்டுவீர்கள்.
எதையும் சமாளிக்கும் வகையில் பணபலம் கூடும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் நிம்மதியுண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சோர்ந்த முகம் மலரும். வர வேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். போட்டியாளர்களுக்குப் பதிலடி கொடுப்பீர்கள். ஆரோக்கியம் கூடும். கொடுக்கல் வாங்கலில் நிம்மதி உண்டாகும். வெளிநாட்டுப் பயணங்கள் திருப்திகரமாக அமையும்.
உங்களின் நிர்வாகத் திறன் கூடும். புது வேலை கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் நட்பு கிட்டும். சங்கம், அறக்கட்டளை போன்றவற்றிலிருந்து கவுரவப் பதவிகள் தேடி வரும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களும் விரும்பி வரு வார்கள். வேலையாட்கள் பொறுப்பாக நடந்துகொள் வார்கள். லாபம் அதிகரிக்கும். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் இனி கையெழுத்தாகும். இந்தக் குரு மாற்றம் திக்குத்தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதுடன் கவுரவத்தையும் பணத்தையும் அள்ளித்தரும்.

பரிகாரம்: சதயம் நட்சத்திரம் நாளில் இஷ்ட தெய்வத்தை வணங்கி பார்வையற்றவர்களுக்கு ஏதேனும் உதவிகள் செய்தால், உங்களின் எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும்.

 


குரு பகவான் உங்கள் ராசிக்குள் நுழைந்து 2.10.2018 வரை ஜென்ம குருவாக அமர்வதால் உடல் ஆரோக்கி யத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். யோகா, தியானம், உணவுக் கட்டுப்பாடு ஆகியவை அவசியம். கணவன் மனைவிக்குள் வீண் விவாதம், சண்டை சச்சரவு, சந்தேகத்தால் பிரிவு வரக்கூடும். குலதெய்வக் கோயிலுக்கு மறக்காமல் சென்று வாருங்கள். உதவி கேட்டு வரும் உறவினர், நண்பர்களுக்கு. உங்களால் முடிந்ததை மட்டும் செய்யுங்கள்.
குரு பகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். குரு பகவான் உங் களின் 7-ம் வீட்டையும் பார்ப்பதால் அடிமனதில் இருந்த பய உணர்வு நீங்கும். அதிகாரப் பதவியில் இருப் பவர்களால் உதவியுண்டு. வி.ஐ.பிக்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். ஓரளவு வருமானம் உயரும். தந்தைவழிச் சொத்துகள் கைக்கு வந்து சேரும். வெளியூர்ப் பயணங்கள் சாதகமாக அமையும்.
வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு பெரிய முதலீடு செய்வீர்கள். பற்று வரவு உயரும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அன்பாக நடத் துங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்ககளைப் பகைத்துக்கொள்ள வேண்டாம். இந்தக் குருப்பெயர்ச்சி வீண் சந்தேகம், வேலைச்சுமையால் உங்களை அலை கழித்தாலும் போராட்டக் குணத்தாலும் விடாமுயற்சி யாலும் வெற்றிபெறவைக்கும்.

 

பரிகாரம்: ரேவதி நட்சத்திர நாளில் சூரிய உதயத்தை பார்த்து தியானம் செய்யுங்கள். ஊனமுற்றோருக்கு உதவுங்கள். ஆரோக்கியம் கூடும்.


குரு பகவான் 2.10.2018 வரை உங்களின் விரய வீடான 12-ம் வீட்டிலேயே அமர்வதால் உறவினர்கள், நண் பர்களுக்கு மத்தியில் வெறும் பெருமைக்காகக் கைக்காசைக் கரைக்காதீர்கள்.
குடும்பத்தில் சாதாரண விஷயத்துக்கெல்லாம் சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள். மனைவி, பிள்ளை களை அரவணைத்துப் போகவும். எல்லாவற்றிலும் உங்களின் நேரடி கவனம் இருப்பது நல்லது. குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், சில சமயங்களில் எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். அதன் மூலம் அசுர வளர்ச்சி யடைவீர்கள். உங்களைக் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருந்த உறவினர்களெல்லாம் இனி வலிய வந்து உறவாடுவார்கள். அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியது வரும்.  நண்பர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். தள்ளிப்போன அரசு காரியங்கள் உடனே முடியும். அண்டை வீட்டாரின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் கடன் வாங்கிப் புதிய முதலீடு செய் வீர்கள். லாபத்தைப் பெருக்க நவீன விளம்பர உத்தி களைக் கையாளுவீர்கள். புதிய சலுகைகளையும் அறி முகப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். ஆனால், வேலையாட்களிடமும் உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளிடமும் நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருங்கள். இடமாற்றம் உண்டு.  இந்தக் குரு மாற்றம் திடீர் செலவுகளையும் பயணங் களையும் தந்தாலும், பொது அறிவையும் புது அனுபவங்களையும் தந்து உயர்த்தும். தனிப்பட்ட வாழ்வில் அமைதி ஏற்படும்.

பரிகாரம்: அஸ்வினி நட்சத்திர நாளில் மவுன விரதம் இருந்து குலதெய்வத்தை மனதார வணங்குங்கள். மன நிம்மதி கிடைக்கும்.


குரு பகவான் 2.10.2018 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்குள் அமர்வதால், எதிலும் வெற்றிபெறுவீர்கள். தொட்ட காரியமெல்லாம் துளிர்க்கும். சோர்ந்திருந்த நீங்கள் உற்சாகமடைவீர்கள். வருமானம் உயரும். பிரபலங்கள், நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருவரும் மனம்விட்டுப் பேசுவீர்கள். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைக் குரு பார்ப் பதால் புதிய தெம்பு பிறக்கும். சோர்வு, விரக்தி விலகும். கடினமான வேலையைக்கூட இனி எளிதாக முடிப்பீர்கள்.  வெளிவட்டாரத்தில் உங்களைத் தாக்கிப் பேசியவர்கள் இனிப் புகழ்வார்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். இழுபறியாக இருந்த பூர்வீகச் சொத்துப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உங்களிடமிருந்த எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். வெகுநாட்களாகச் செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத்தீரும். வர வேண்டிய பாக்கிகளை நாசூக்காக வசூலியுங்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் தள்ளிப் போன பதவி உயர்வு, சம்பள உயர்வு இனித் தடையில்லாமல் கிடைக்கும். வேலைச் சுமை குறையும். உங்களின் தனித் திறமையை அதிகப் படுத்திக்கொள்வீர்கள். உயர் தொழில்நுட்பம், நிர்வாகக் கல்விக்காக வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு சிலருக்கு உண்டு.
இந்தக் குரு மாற்றம் மன உளைச்சல், தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுவிப்பதுடன், பணப் புழக்கத்தையும் நிம்மதியையும் தந்து சமூகத்தில் தலை நிமிர வைக்கும். ஞானமும் பக்குவமும் உயரும் காலம் இது.

பரிகாரம்: கார்த்திகை நட்சத்திரம் நடைபெறும் நாளில் ஏதாவது ஒரு கோயிலுக்கு சென்று வணங்கி விட்டு புற்றுநோயாளிகளுக்கு உதவுங்கள்.

 


குரு பகவான் 2.10.2018 வரை உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டுக்குள்ளேயே அமர்ந்திருப்பதால் வெகுநாட்களாகியும் வராமல் இருந்த பணம், இனி வந்துசேரும். பழைய சொத்துப் பிரச்சினைகளுக்குச் சுமுகமான தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி கிட்டும்.  அனாவசிய, ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். கோதுமை, கீரை, நார்சத்து உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பேச்சிலிருந்த தயக்கம், தடுமாற்றம் நீங்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் யார் நல்லவர் என்பதை உணருவீர்கள். தாய்வழிச் சொந்தபந்தங்களால் ஆதாயமுண்டு. இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, நல்ல வீடு அமையும். சிலருக்கு வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்கும். கிரகப் பிரவேசம் செய்து புது வீட்டில் குடி புகுவீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை அறிந்து சரக்குகளைக் கொள்முதல் செய்வது நல்லது. பழைய வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். கடையை வேறிடத்துக்கு மாற்றியமைப்பீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். இந்தக் குருமாற்றம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான நெளிவு சுளிவுகளை உணர்த்தும். அனுபவப் பாடங்களை அள்ளித் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: திருவோணம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் முடிந்தால் ரத்த தானம் செய்யுங்கள்.
வீண் பழி விலகி நிம்மதி உண்டாகும்.


குரு பகவான் 2.10.2018 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் நுழைவதால் புதிய வியூகங்களை அமைத்து வாழ்வில் முன்னேறுவீர்கள். இனி எதைத் தொட்டாலும் வெற்றியில் போய் முடியும். அடிக்கடி குடும்பத்தில் நிலவிவந்த வீண் விவாதங்கள், சண்டை சச்சரவுகள் எல்லாம் இனி முடிவுக்கு வரும். வருங்காலத்தை மனதில் கொண்டு கொஞ்சம் சேமிக்கவும் செய்வீர்கள். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். பணவரவு சரளமாக வருவதால் நெடுநாள் கனவான வீடு, மனை வாங்கும் ஆசை நிறைவேறும். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள்.
பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்ப்பீர்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குரு உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். அரசால் ஆதாயம் உண்டு.முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். நவீன வசதிகளைப் புகுத்தி வாடிக்கை யாளர்களைக் கவருவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். அனுபவமிகுந்தவர்களைப் பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையையும் தகுதியையும் மேலதிகாரி அங்கீகரிப்பார். உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இனித் தேடி வரும்.
இந்தக் குரு மாற்றம் வறுமை, வாட்டம், விரக்தியிலிருந்து உங்களை விடுவிப்பதுடன் நீண்டகால கனவுகளை நனவாக்குவதாக அமையும்.

பரிகாரம்: உத்திரட்டாதி நட்சத்திர நாளில் ஆதரவற்ற முதியோருக்கு உதவுங்கள். எதிலும் வெற்றி கிடைக்கும்.


குரு பகவான் 2.10.2018 வரை உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் சென்று மறைகிறார். 8-ல் நிற்கும் குருவால் பிரிந்தவர்கள் ஒன்றுசேர்வீர்கள். ஆனால், ஏதாவது பிரச்சினையில் சிக்கிக்கொள்வோமோ என்ற அச்சம் இருக்கும். திட்டமிட்ட பல வேலைகள் தாமதமாக முடியும். சில விஷயங்களை அதிக செலவு செய்து முடிக்க வேண்டியது வரும். வறட்டுக் கவுரவத்துக்காகத் தடபுடலாகச் செலவு செய்வதைக் குறைத்துக்கொள்ளுங்கள். நள்ளிரவுப் பயணங்களைத் தவிர்க்கப் பாருங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பேச்சில் இருந்த தடுமாற்றம் நீங்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வீண் பயம் விலகும். மனைவி வழி உறவினர்களால் இருந்து வந்த சங்கடங்கள் தீர்ந்து நல்லது நடக்கும். உடல் சோர்வு, வீண் அலைச்சல்,டென்ஷன் விலகும். தாய்வழிச் சொத்து கைக்கு வரும். சிலர் வீடு மாறுவீர்கள். குரு பன்னிரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். முன்னோர்கள் விட்டுச் சென்ற நல்லவற்றைப் பாதுகாக்க முயல்வீர்கள். இந்த ஒரு வருடத்தில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. வீண் பேச்சில் நேரத்தை வீணடிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. வியாபாரத்தில் கடையை வேறிடத்துக்கு மாற்றுவீர்கள். பழைய பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த கூச்சல், குழப்பங்களெல்லாம் நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களிடம் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டாம். புது வேலைக்கு மாறும்போது யோசித்து செயல்படுங்கள்.
இந்தக் குருப்பெயர்ச்சி முன்னெச்சரிக்கை உணர் வாலும், யதார்த்தமான பேச்சாலும் உங்களை வளர்ப்பதுடன் பணத்தின் அருமையையும் புரிய வைக்கும்.

பரிகாரம்: ரோகிணி நட்சத்திரம் நடைபெறும் நாளில் கோயிலுக்கு சென்று ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுங்கள். உங்களின் எதிர்ப்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும்.