ரஜினி மட்டும் அரசியலுக்கு…

ரஜினி மட்டும் அரசியலுக்கு…

ஆர்கே நகர் தேர்தல் கேன்சல் ஆகுறதுக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடி கோமால போன எங்க தாத்தாவுக்கு இன்னிக்கு நினைவு திரும்பியது.

– நல்லாயிருக்கியா தாத்தா?

– ஜம்முன்னு இருக்கேன் பேராண்டி. ஆர்கே நகர்ல யாருய்யா ஜெயிச்சது

– தாத்தா, அப்பவே அத தள்ளி வச்சிட்டாங்க.

– அப்போ தினகரன் ஜெயிக்கலியா? நல்ல மனுஷனாச்சே. வோட்டுக்கு 5000 ரூபா கொடுத்தாரே.

– அதான் தள்ளி வச்சாங்க. அடுத்த வாரம் மறுபடியும் ஓட்டு போடணும்

– அப்ப தினகரனோட தொப்பி சின்னத்துக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிட வேண்டியது தான?

– தொப்பி தினகரனுக்கு கிடைக்கல. அவருக்கு குக்கர் சின்னம்.

– இபிஎஸ் வேற சின்னத்துக்கு எப்படி சம்மதிச்சாரு.

– இபிஎஸ்க்குத்தான் இரட்டை இலை கிடைச்சுடுச்சே.
– அதைத்தான முடக்கி வச்சாங்க. இல்ல, பொறு. தினகரனுக்கும் அதே சின்னம் தான இருக்கனும்?

– அதான் தினகரன் இப்ப இபிஎஸ் கூட இல்லியே.

– என்னாச்சு? அவனும் ஓபிஎஸ் மாதிரி அதிமுகல இருந்து பிரிஞ்சுட்டானா?

– ஓபிஎஸ் இப்ப இபிஎஸ் கூட சேந்தாச்சு.

– அவரு எப்ப சேந்தாரு?

– தினகரன் வெளிய போனதும் இவரு சேந்துட்டாரு.

– தினகரன் ஏன் வெளிய போனான்?

– அது பெரிய கதை. தினகரனை டெல்லில வச்சு அரெஸ்ட் பண்ணி விசாரணை எல்லாம் பண்ணினாங்களா, அப்ப என்ன நடந்துச்சுன்னா..

– நில்லு. அவனை எதுக்கு அரெஸ்ட் பண்ணினாங்க, அதுவும் டெல்லில?

– இரட்டை இலை சின்னம் வேணும்ன்னு அங்க ஆபிசருக்கு லஞ்சம் கொடுத்தாரு.

– பின்ன இரட்டை இலை சின்னம் ஏன் அவனுக்குக் கிடைக்கல. எல்லா எம்எல்ஏஸும் அவன் பக்கம் தான் இருந்தாங்க.

– இப்ப 18 எம்எல்ஏஸ் மட்டும் தான் அவர் பக்கம்.

– அவங்களை வச்சு ஆட்சியை கலைச்சிருக்கலாமே.

– அதுக்குள்ளத்தான் அவங்க அத்தனை பேரையும் கட்சில இருந்து நீக்கிட்டாங்களே
.
– இவ்வளவு குழப்பம் நடந்திருக்கே. வித்யாசாகர் ராவ் என்ன பண்ணிட்டு இருந்தாராம்?

– அவரும் இப்ப இல்லியே. புது கவர்னர் வந்தாச்சு.

– உண்மையை சொல்லுடா. நான் எத்தனை வருஷம் கோமால இருந்தேன்.

– ரெண்டு மாசம் தான் தாத்தா.

– ரெண்டு மாசத்துலயா இவ்வளவும்?

– இதுக்கே இப்படின்னா, மோடி சென்னைல வந்து கலைஞரை வீட்லயே பாத்துட்டு போன கதை எல்லாம் எவ்வளவு இருக்கு?

– அய்யய்யோ?

– தாத்தா..நடக்காதது ஒண்ணே ஒண்ணுதான்.

-அது என்னடா பேராண்டி?

-ரஜினி மட்டும் அரசியலுக்கு இன்னும் வரல.

(ஒரு வாட்ஸப் உலா)

நன்றி: உருவாக்கியவருக்கு.