ரஜினியின் முடிவு இதுதான்!

-ஒற்றன்

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து என்ன முடிவெடுப்பார் என்று அனைத்து தரப்பு மக்களும் மீடியாக்களும், போட்டிப் போட்டுக் கொண்டு யோசித்து கொண்டிருக்கும் இவ்வேளையில்,

 

இதுதான் இவரது முடிவு என அறுதியிட்டுக் கூறுகிறோம்:

என்னை வாழ வைக்கும் தமிழக மக்கள், ரசிகர்கள் அனைவரும் நான் அரசியலுக்கு வருவேனா என்று உற்று நோக்கி வரும் இந்த நேரத்தில் இந்த வரவிருக்கும் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் வளமான, நலம் கொடுக்கும் ஆண்டாக அமைய ஆண்டவனைப் பிராத்திக்கிறேன். எனது அரசியல் பிரவேசம் குறித்து நான் முடிவெடுக்கும் முன் தமிழகம் முழுவதும் எனது சுற்றுப் பயணத்தை இந்த 2018ல் செய்வேன். தமிழக மக்களின் எண்ணம், அவர்களது தேவை குறித்து எனது சுற்றுப்பயணத்தில் தெரிந்து கொள்வேன். அவர்களின் நலன் குறித்தும், அவர்களின் எண்ண ஓட்டங்கள் குறித்தும் தெரிந்துக் கொண்டு பின்னரே எனது முடிவினைத் தெரிவிப்பேன். அதுவரை இந்த மீடியாக்கள், சமூக வலைத் தளங்களின் கணிப்புகளுக்கு இரையாகாமல் தமிழக மக்கள், என் அன்புக்குறிய ரசிகர்கள் அனைவரும் அமைதி காத்து உங்களின் குடும்ப, சமூகப் பொறுப்புகளை திறன்படச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

ரஜினியின் வேகம்: கடந்த டிசம்பர் 26, 2017 முதல் தனது இராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி அவர்கள் தனது வேகமான நடையில் திருமண மண்டபத்திற்குள் நுழையும் காட்சி.

ரஜினியின் வேகமான நடை, வைரலாகும் வீடியோ காட்சி