“திரு.சகாயம் அவர்கள் வணக்கம் ஏசியாவோடு”

-முத்துக்கண்ணன், சிறப்புச் செய்தியாளர்.

கனடாவிலிருந்து வெளிவரும் “வணக்கம் ஏசியா” மாத இதழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக விவசாயிகள் துயர்துடைக்க கனடாவில் நிதி திரட்டும் நிகழ்ச்சியை வெற்றிகரமாக எட்மண்டன் மற்றும் கால்கேரி தமிழர்களின் பேராதரவுடன் நிகழ்த்தியது. நிகழ்ச்சிக்கு கனடாவின் மத்திய அமைச்சர், பாராளுமன்ற எம்.பி, மற்றும் மாநகர மேயர் அவர்களின் சார்பில் மாமன்ற உறுப்பினர் அவர்களும் கலந்து கொண்டு அவர்களின் ஆதரவினை நமது தமிழ் விவசாயிகளுக்கு கூறினர்.

(படத்தில் திரு. சகாயம் அவர்கள் வணக்கம் ஏசியா செய்தித்தாளை வாசித்தப்போது.)

(தமிழ் விவசாயப்  பயனாளிக் குடும்பத்தினர் மற்றும் புதுக்கோட்டை மக்கள்ப் பாதை அமைப்பின் நிர்வாகிகளுடன் திரு. சகாயம் அவர்கள்.)

நிகழ்ச்சியில் திரப்பட்ட நிதி சரியான நபருக்கு சரியான அமைப்பின் மூலம் சென்றடைய வேண்டும் என்பதில் வணக்கம் ஏசியா நிர்வாகிகளின் நிலைப்பாட்டில் தமிழகத்தில் “லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து” என்ற உரத்தக் குரலுடன் உயர்திரு. சகாயம், இந்திய ஆட்சிப்பணி அவர்களின் அறிவுறுத்தலுடன் பணியாற்றிவரும் மக்கள் பாதை அமைப்பினரை அணுகினோம். அவர்களும் நமது வணக்கம் ஏசியா கருத்தினை  ஏற்று சரியான பயனாளியை தேர்வுசெய்து திரு. சகாயம் அவர்களின் நாளைப் பெற்று அவர்களிடம் பயனாளியை அறிமுகம் செய்து நலத்திட்ட உதவியானது வரும் ஞாயிறு (மார்ச் 11ம் தேதி) “கிராமத்தில் ஒரு நாள் ” என்னும் நிகழ்ச்சியாக  நடைபெற உள்ளது.