கோமியம் VS கொட்டை!!! அதிர்ஷ்டம்

நம்ம ஊர்ல பசு மாடுகளும் அதனோடு பாலும் முக்கியமா கோமியத்துக்கு பிஜெபி ஆட்சியில எவ்வளவு முக்கியத்துவம்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்.பசுக்களே தெய்வம்னும், சகல செளபாக்கியமும் தரும்னும் நம்புறாங்க. ஆனா பாருங்க அதவிட ஒத்த எருதுங்க உலக பேமஸ் அதிலும் எங்கத் தொட்டா அதிர்ஷ்டம் தெரியுங்களா?

படிங்க,

பாருங்க…

இந்த எருதுதாங்க உலக பேமஸ்

இந்த எருதோட சிலைதாங்க.

 

இந்த எருது நிஜத்துலகூட வாழல. ஆனா உலக நாட்டு மக்கள்ட்ட ரொம்ப பிரசித்தி.

எருது சிலைய அமெரிக்கா திவாலான 1987க்கு அப்புறம் இத்தாலியை சேர்ந்த அமெரிக்கர் “ஆர்த்ரோ டி மொடிக்கா” (Arturo Di Modica) இரண்டு வருசம் கஷ்டப்பட்டு சிலைய வடிச்சு 1989ல்  வால்த் தெருல (WALL STREET, NEW YORK, USA)  வச்சிட்டார். அதுக்கப்புறம் ராசிதானாம் போங்க. ஒரு சிலைக்கு முன்னாடி பொதுவாக இப்படித்தான் நின்னு போட்டோ எடுப்பாங்க.

ஆனா சிலைக்குப் பின்னாடியும் நின்னு!!! அதிகமானவர்கள் போட்டோ எடுக்கிறார்களாம். சிலையின் விதைப்பையை (கொட்டையை) பிடித்தபடி, வருடியபடியெல்லாம்.

ஏன் தெரியுமா?

இன்னும் கீழப் படிங்க..

அதிர்ஷ்டம் கொட்டுமாம்.

மேலேயுள்ள போட்டோவில் உள்ளவர்கள் போல பல இலட்சம் பேர் இது மாதிரி தொட்டு கோடிஸ்வரர்களாகவும், இலட்சாதிபதிகளாகவும் வலம் வருகின்றனாரம்.

வெளிநாட்டு செய்தி இணையத்தளத்துல இப்படி எழுதியிருக்காங்க,

“It gives you good luck,” is the usual justification for fondling the testicles, according to tourists from South America, Asia, and all sorts of places in between.

இதை நம்பி இந்த சிலைக்கிட்ட போறவங்க பெரும்பாலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் வேண்டி இதத் தொடாமல் நகருவதேயில்லை.

கடைசியா இந்த போட்டோவப் பாருங்க, அதிர்ஷ்டம் அங்கேயே வரணும்னு ஒருத்தரு பின் வழியா உள்ளப் பாக்குறாரு.

 

 

பசுக்களைவிட ஒரே ஒரு எருது அதுவும் சிலையோட________

உலகம் முழுவதும் மக்கள் ஒரே மாதிரிதான். அதாங்க, நீங்க மனசுல என்ன நினைக்கிறீங்களோ அதேதான் நானும் நினைக்கிறேன்.

-வழிபோக்கன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *