அந்தரங்கம் அது அந்தரத்திலா?

-இராசேந்திரன்

இன்றைய காலகட்டத்தில் அந்தரங்கம் என்பதே இல்லை என்பது வெளிப்பட்டுக் கொண்டே வருகிறது. நாம் எங்கு சென்றாலும் கூகுள் பார்க்கிறது. நீ என்ன செய்தாலும் நமது செல்போன் கேமராவில் பதிவாகிறதா எனப் பீதி. காலை எழுந்தது முதல் என்ன என்ன செய்கிறொம், எங்கே போகிறோம் என எல்லாமும் மூஞ்சிப் பக்கத்திலும், என்ன இப்ப பக்கத்திலும் பதிவிட்டு நம்மைச் சாராதவர்களுக்கும் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் எனபதை காட்டிக் கொண்டிருக்கிறோம். இது சரியா? இதனால் ஏற்படும் பின்விளைவுகள் எவ்வளவொ இதே சமூக வலைத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் கூறும் “வேசி ஊடகங்கள்”  கூறினாலும் படித்த (?) அனைத்து வயதினரிடமும் இந்த சமூகக் கொலைக் கருவி எல்லையற்ற வேர்களை பரப்பி உள்ளது.

காலை எழுந்து உள்ளங்கையைப் பார்த்தோ, அல்லது கடவுளின் புகைப்படத்தையோ, தாய் தந்தையரின் முகத்தையோ பார்த்த நாட்கள் காணமல் போய் மொபைல் முகத்தை பார்த்து வருகிறார்கள்.

நடிகர், நடிகையர்கள் சமூக வலைதளங்களில் 100க்கு 98 பதிவுகள் அவர்களது அடுத்த வாய்ப்புக்காக போட்டு வியாபாரம் செய்கின்றனர். ஆனால் அதைப் பார்த்து அப்பாவி இளைஞர்கள், பெண்கள், குடும்பத் தலைவிகள் தங்களது அந்தரங்கத்தை அடகு வைக்கின்றனர்.

2ஜி, 3ஜி, 4ஜி வளர்ச்சிகள் அப்பாவிகள் அந்தரக்கத்தை குறிவைத்தும், அவரவர்களின் பர்சையும் பதம் பார்த்தே வருகின்றன.

 

இது தொலைக்காட்சி நடிகர், நடிகையர்கள் … தங்களது விளம்பரயுத்தியாக…

இது அப்பாவி குடும்பப் பெண்கள்… இவர்களின் வீடியோக்களின் பின்னணியில் இருக்கும் இவர்களது வீட்டின் அமைப்புகளே சொல்லும் இவர்களின் பொருளாதாரத்தை…

 

 

இவங்களுக்கு லைக் வேண்டுமாம், லைக்க வச்சு ஒருவேளை சாப்பாடு வாங்க முடியுமா?

 

இது இளையப் பெண்கள்…

 

 

நடு ரோட்லயும் நாங்க இப்படி ஆடுவோம்…

 

இது லைக் வேணும்னு  இப்படி… இவர்கள் திறமைகளை வெளிக்கொணர சரியான அமைப்புகள் இல்லாததால் தான்…

இது ஆபாசத்தின் முதல் படி. இதைவிட  பல அந்தரங்க னிகழ்வுகளை இது போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்வை இருளுக்கு கொண்டு செல்லாதீர்கள்.

மேலேயுள்ளவை வெறும் சாம்பிள்கள்தான். கண்றாவிகள் கோடிக்கணக்கில். இது போல சமூக வலைத்தளங்கள் உங்களை படுகுழியில் தள்ளிவிடும் என்பது உறுதி. உங்கள் குழந்தைகள் முதல் நடுத்தர வயதுடைய அனைவரையும் கண்காணித்து இது போன்ற வலைத்தளங்களிலிருந்து ஒதுங்கி இருக்கச் செய்யுங்கள்.

நன்றாக ஆடுங்கள் உங்களின் வீட்டுக்குள்ளே.

அடுத்தவர் வீட்டின் நடுவே அவரின் மொபைல் போனில் ஆடுவதை தவிர்த்து விடுங்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *