About Us

ஹலோ ஏசியா செய்திக் குழுமம், கனடா தமிழர்களால், தமிழர்களுக்காக நடத்தப்படும் ஒரு மாதச் செய்தித்தாள். அல்பெர்டா, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் சஸ்க்கச்சீவன் மாகாணங்களின் முதல்  தமிழ்ச் செய்தித்தாள் என்பது மட்டுமல்லாமல் தமிழர்கள் வாழும் கனடாவின் பெரும்பான்மையான நகரங்களிலும் கிடைக்கப்பெறும் ஒரே தமிழ் செய்தித்தாள் ஹலோ ஏசியா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாகாணத்  தமிழ் மக்களின் உள்ளக் குரலாக மாகாண அரசாங்கங்களுக்கு ஒலிக்கும் விதமாக மாதந்தோறும் மாகாண  மற்றும் மத்திய (ஃபெடரல்) அரசப் பிரதிநிதிகளை சென்றடைகிறது.
ஹலோ ஏசியா வெளிவரத்துவங்கி 4ம் மாதத்திலேயே கனடாவின் பாராளுமன்றத்தில் ஹலோ ஏசியாவின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது கனடாவில்  வாழும் அனைத்து தமிழர்களும்  பெருமை கொள்ளச் செய்யும் நிகழ்வாகும்.
உங்கள் உள்ளக் குரலாக என்றும் ஒலித்திருக்கும் ஹலோ ஏசியாவின் செய்தித்தாளை மாதந்தோறும் படியுங்கள்.
என்றும் உங்களோடு இணைந்து நமது கலாச்சாரம், பண்பாடு, உழைப்பு, உறவுகள் பற்றி உலக சமுதாயம் அறிந்துக் கொள்ள ஹலோ ஏசியா இதழை பாலமாக பயன்படுத்துவோம்.
ஹலோ ஏசியாவின் தமிழ்ச் செய்தித்தாளுடன் இணைந்திருங்கள்.
நன்றி!
– ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்
எட்மண்டன் – அல்பெர்டா
கனடா