-ஹெலோ ஆசியா நியூஸ்

OLG.org
ஓண்டொரியோவின் வடபகுதியில் உள்ள ஐரோகோயிஸ் ஃபால்ஸ் என்ற சிறிய நகரத்தில் வசிக்கும் கைல் முரே மற்றும் ஜெனிபர் ஸ்டூயர்ட்-ஃப்ளின் தம்பதிகள், $70 மில்லியன் (சுமார் 480 கோடி தமிழ்நாட்டு ரூபாயில்) லாட்டோ மேக்ஸ் பரிசை வென்று எல்லாரையும் ஆச்சரியப்பட வைத்திருக்காங்க. இந்த தம்பதிகள், புதிதாக பெற்றோரானது மட்டும் அல்ல, கைல் வாழ்க்கையில் முதன்முறையாக லாட்டரி டிக்கெட் வாங்கியதும் அதிர்ஷ்டம் கையாண்டதோடு, பெரிய பணத்தை அடிச்சிருக்காங்க.
கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி நடந்த லாட்டோ மேக்ஸ் டிராவில் இவர்கள் வெற்றி பெற்றதுதான் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்கா பேசப்படுகிறது. கைல் முரே, தனது தாயாரை டிம்மின்ஸ் விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்து, குழந்தையை பார்த்து மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு திரும்பும்போது தற்செயலாக தான் முதல் முறை லாட்டரி டிக்கெட் வாங்கியிருக்கார். “டிக்கெட்டை வாங்கினதும் ஃப்ரிட்ஜின் மீது வைத்து விட்டு மறந்துட்டேன், மறுநாள் தான் நண்பர் ஒருவரின் சமூக வலைதளப் பதிவைப் பார்த்தப்போ, நம்ம பகுதியிலயே யாரோ லாட்டோ மேக்ஸ் வெச்சிருக்காங்கன்னு தெரிஞ்சது. அப்போ தான் நானும் நினைச்சேன்,” என்று கைல் தனது அனுபவத்தை பகிர்ந்தார்.
அப்புறம், ஜெனிபர் ஸ்டூயர்ட்-ஃப்ளின் அவர்கள் OLG ஆப்பைப் பயன்படுத்தி டிக்கெட்டை ஸ்கேன் பண்ணியும், அதுவே வெற்றியாளரின் டிக்கெட் என்று கண்டுபிடிச்சாங்க. “அப்போ பெருமூச்சு விட்டேன், எனக்கு ஒரே குழப்பமா இருந்தது. ஆப் மூடி மீண்டும் திறந்து, டிக்கெட்டை மறுபடியும் ஸ்கேன் பண்ணினேன். அப்பவே கைல் என்ன கிட்டே, ‘என்னாச்சு நாம வின் பண்ணிட்டொமான்னு? கேட்டான்.
இந்த பரிசு எங்களுடைய குடும்பத்துக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகுது. ஜெனிபர், தன்னுடைய அக்காவுக்கு வீடு வாங்கவேண்டும் என்பதைத்தான் முதலில் நினைத்தார். “அவளே எனக்கு உலகத்தின் மிக சிறந்த மனிதர். அவளுக்கு வீடு வாங்கி கொடுக்கணும்,” என்றார் நெகிழ்ச்சியுடன்.
அது மட்டுமில்ல, அவர்களின் குழந்தைகளுக்கு இனி வாழ்கையில் எந்த விதமான பொருளாதார பிரச்சனையும் வராது என்பதில் ஜெனிபர் பேரெண்ணம் கொள்வதை தடுத்துக் கொள்ள முடியவில்லை. “நான் வளர்ந்தது போல இல்லாம, என் குழந்தைகள் ஒரு முழுமையான மற்றும் வளமான வாழ்க்கையை அனுபவிக்கப் போறாங்கன்னு நினைக்கும்போதே மனசு கலங்கிடுது,” என்றார்.
கைல், “அப்புறம் நா ஏதாவது நிலம் வாங்கி, ஒரு விவசாயம் பண்ணனும் என்று தனது எதிர்காலத் திட்டங்களையும் சொல்லிவிட்டார்.
தம்பதிகளின் வாழ்க்கையில் சமீபத்தில் சில சிரமங்கள் இருந்தாலும், இந்த லாட்டோ வெற்றி அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை தந்திருக்கிறது. “எல்லாம் நமக்கு சரியா போகலேனு தோணுது. ஆனா இந்த வெற்றியுடன், நாம எதுக்காக வருத்தப்பட்டோமோ, அதற்கான அடுத்த பக்கம் போயிருச்சு,” என்று கைல் தனது பெருமிதத்தை பகிர்ந்து கொண்டார்.
