Letters to Editor

கே. மனோகரன், வாசகர் மதுரையிலிருந்து,

கோயில் சம்பிரதாயங்கள் பற்றி அரசு உத்தரவிட முடியுமா? – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி!

பிறகு யார் உத்தரவு போடலாம் என்பது பற்றி சொல்லலாமே திரு. நீதிபதி அவர்களே!
கோயில்கள் கட்டப்பட்டது அரசர்களால், நிர்வகிக்கப்பட்டதும் அரசர்களால். அதையே இப்பொழுது மன்னர் ஆட்சிக்குப் பிறகான மக்களாட்சியில் மக்களை ஆளும் அரசுகள்தான் கோயில்களை நிர்வகிக்க வேண்டும். அதுதான் நீதியும் கூட. அரசுகள் எந்தக் கொள்கையடையன என்றாலும் அவற்றுக்கே முழு அதிகாரம் உள்ளது.
சம்பிரதாயங்களை அரசு மீறலாமா? என்றும் கேட்டுள்ளார். காலத்திற்கு ஏற்றாற்ப் போல சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் மாறித்தான் வந்துள்ளன.

அல்ல அப்படியெல்லாம் மாற்றக்கூடாது என்றால் நீங்களும், உங்கள் சமூகத்தாரும் முதலில் அதை செய்து காட்டுங்கள். பின்னர் மற்றவர்களும் மாறுவர்கள்.

  1. உங்கள் பெண்களை குல, மனுதர்மப்படி படிக்க, வேலைக்கு அனுப்பாதீர்கள்.
  2. உங்கள் பெண்களுக்கு சிறார் திருமணம் செய்து வையுங்கள்.
  3. உங்கள் குல பெண்கள் கணவர் இறந்தால் மொட்டை அடித்து திண்ணையில் இருக்க வையுங்கள். இந்த மூன்றை மட்டும் செய்து காட்டுங்கள், நாங்களும் உங்களுடன் கைக்கோர்க்கிறோம். என்ன செய்வீர்களா?

மறுமொழி இடவும்