-ஹலோ ஏசியா செய்தி நிறுவனம்

இந்த செய்தியை ஒலி வடிவில் கேட்கலாம்:

மெக்கா : மெக்காவில் கடுமையான வெப்பம் காரணமாக உயிரிழந்த ஹஜ் பயணியரில் இந்தியர்கள் பலி எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புனித ஹஜ் யாத்திரைக்காக, இஸ்லாமிய மக்கள் ஆண்டுதோறும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம். கடந்த 14ம் தேதி துவங்கிய இந்த புனித யாத்திரைக்காக இதுவரை அங்கு 20 லட்சம் பேர் திரண்டுள்ளனர்.

சவுதியில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக வெப்பம் பதிவாகி வரும் சூழலில், யாத்திரை வந்தவர்கள் இடையிடையே மயக்கம் அடைந்தனர். இதில் சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்தன. இந்நிலையில், நேற்றுகடும் வெப்பத்தால் உயிரிழந்த ஹஜ் பயணியரின் எண்ணிக்கை 900 ஐ கடந்துள்ளது. இதில் 80 இந்தியர்கள் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் மெக்காவில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. சில இந்தியர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

This news is brought you by:

By