கட்டுரையாளர்: பத்மநாபன், கனடா

தனித்துவம் கொண்ட மக்கள், கலாச்சாரங்களை கொண்ட மாநிலங்கள் ஒரு ஒன்றியத்தின் கீழ் இருக்கும் போது உலக அடையாளத்திற்கு ஒட்டுமொத்த நாட்டிற்கான ஒரு கொடியும் , அந்ததந்த மாநில மக்களை பிரதிபலிக்கும் விதமாக அவர்களின் அடையாளமாக ஒரு கொடியும் இருப்பது மக்களால் விரும்பப்படும். உலகின் ஏனைய ஜனநாயக நாடுகளான அமெரிக்க, கனடா நாடுகளிலும் அதன் ஒவ்வொரு மாகாணங்களும், மாநிலங்களும் தங்களுக்கென ஒரு தனிக் கொடி ஒவ்வொன்றினையும் கொண்டுள்ளன.

இணைப்பு

https://www.flags.com/canadian-province-flags/

https://www.usatoday.com/story/news/2023/03/18/complete-us-state-flags-list/11025139002/

அதுபோல தமிழ் நாடும் தனக்கென ஒரு கொடியை தனதாக்கி வைத்துக் கொள்ள தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

1970லேயே தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி அவர்கள் தனிக்கொடி ஒன்று தேவை என ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

தமிழர்களின் ஆசையை திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என நம்புவோம்.

தமிழனுக்கென தனிக்கொடி ஒன்றை தந்து மகிழடா தமிழா!

தமிழ்நாடு வாழ்க!

By