பத்மநாபன் இராசகோபாலன்

இப்பொழுது பாராளுமன்ற தேர்தல் ஜுரம் வந்துவிட்டதால் மோடி அவர்கள் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து போகிறார். வந்து தான் செய்ததை சொல்லி வாக்கு கேட்கத் தெரியாமல் (எய்ம்ஸ் கட்டுமானம், மெட்ரோ, நிறைவேற்றிய இரயில்வே திட்டங்களை பற்றி) பேசாமல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா (சுப்ரிம் கோர்ட் தீர்ப்பில் குற்றவாளி எனப்பட்டவரை) புகழ்ந்து பேசியும், தி,மு.க தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யாத கட்சி என்றும் கூறிச்சென்றார்.அவற்றுக்கு நெட்டிசன்கள் தக்க பதிலடி கொடுத்து வந்தனர். இதற்கு முத்தாய்ப்பாக தினமலர் நாளிதழ் கடந்த 2018ம் ஆண்டே மோடி அவர்களுக்கு பதில் கூறும்விதமாக ஒரு செய்தி “மக்கள் தலைவரின் முத்தான திட்டங்கள்” எனப் தலைப்பிட்டு வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் தி.மு.கவின் முன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் ஆன திரு. கலைஞர் கருணாநிதி அவர்களின் திட்டங்களை பட்டியலிட்டுள்ளது. இது பிரதமர் மோடி அவர்களின் சமீபத்திய குற்றச்ச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் விதமாக அமைந்துள்ளது தி.மு.கவினரை கவர்ந்துள்ளது.
இதோ அந்தக் கட்டுரை pdf வடிவிலும் அதன் இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

By