-ராஜா, டொரண்டோ, கனடா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி, நிரவி கிடப்பதற்கு உலக அரசியல் “அறிவியலாளர்கள்” மோடி, எடப்பாடி போல உலகநாடுகளின் பலவற்றில் அறிவுஜீவி அரசியல்வாதிகள் ஒரு புறம் இருக்க அவ்வப்போது தமிழகத்திலும், இந்தியாவிலும் எப்படி, எப்படியெல்லாம் வைரஸ் ஒழியும் என்பதை தாண்டி, எவ்வாறு மற்றும் எப்பொழுது வைரஸ் ஒழியும் என கணிக்கத் தவறுவதே இல்லை. அதிலும் கணிப்பதில் இந்தியாவையும், தமிழகத்தையும் பொறுத்தவரை மருத்துவ வல்லுனர்களைவிட இந்த ஜாதகம் கணிப்பவர்களும், விஞ்ஞானி போர்வையில் உலா வரும் அரைவேக்காடுகளும் தான் அதிகம். இதில் புதிதாக மூவர்.
ஒருவர் குஜராத்தை சேர்ந்த சிறுவன். இந்தச் சிறுவன் 12 கட்டங்களுக்குள் மேஸ் (maze) விளையாடுவது போல விளையாண்டு தன் ஞானசூன்யத்தை மற்ற நம்பும் சூன்யங்களிடம் காட்டி வருகிறான்.

அடுத்த வரவு, வாயில் ஊளையிட்டப்படியே கொரோனாவிற்க்கு, இந்திய பொருளாதாரத்திற்கு என்னவாகும் என கணித்து கூறுகிறது.

அடுத்த புதிய வரவு கே.எல். சுந்தர் கிருஸ்ணா, (டாக்டரேட் வேறு செய்துள்ளார்)கொரோனா சென்ற சூரிய கிரகணத்தோடு செயல் குறைந்துவிடும், அழிந்து விடும் என்றும் தான் நியூக்ளியர் சயின்ஸ் படித்து இந்திய விஞ்ஞானியாக இருப்பதாகக் கூறி ஊடகத்தில் ஓசி உலா வேறு.

ஆனால் நடந்தது இந்தியா ரஷ்யாவை பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தை அடையாமல் போவதில்லை என கங்கனம் கட்டிக்கொண்டுள்ளது. இவரைப் போன்றவர்களை நாசா அமைப்பு அழைத்து தலையில் நறுக்கென்று கொட்டாமல் விடுவதால் நாசாவே பார்த்து வியந்த, சாட்டிலைட்டுகளே நின்று போவதாக இப்படி, அப்படி என்று தங்கள் முதுகை தாங்களே சொறிந்து இன்பம் காணும் இந்தியர்கள் அதிகரித்து வருகிறார்கள்.
இது போன்ற மட்டரகமான இந்தியர்களால் அவற்றை தூபம் போட்டு வளர்க்கும் தின பூக்கள் போன்ற மட்டகரமான செய்திதாள்களால் வெளிநாடுகளில் வசிக்கும் வம்சாவளி, மற்றும் குடியேறிய இந்தியர்கள் மேற்குலக நாட்டினரிடம் படும் அவமானம் கொஞ்ச நஞ்சமல்ல. நாசா இவரை போன்றவர்களை அழைத்து முறைவாசல் செய்து யூட்டூபில் ஒளிபரப்பினால் தான் இவர்களுக்கு புத்திவரும். வல்லரசு ஆகும் என்ற கனவில் மிதக்கும் இந்தியர்கள் முதலில் கொரோனா தன்னை தாக்கிவிடக் கூடாது என்று கனவு காணவேண்டும்.
