கண்ணதாசன் எழுதி வெளியிட்டு , எம்ஜிஆரின் அதிமுக கட்சியின் அரசு இயந்திரங்களால் அனைத்துப் பதிப்புகளையும் அழிக்க உத்தரவிட்டு , அதன்படி ஓட்டு மொத்தமாக தமிழக நூலகங்களில் இருந்து நீக்கப்பட்ட நூல் “ எம்ஜிஆரின் உள்ளும் புறமும்” என்ற நூல்.

ஒரு நூலகத்தில் ( பாதுகாப்பு காரணங்களுக்காக நூலகம் பெயர் தவிர்க்கப்படுகிறது) இருப்பதை அறிந்து அதற்காகவே 2018 ஜனவரியில் ஒரு நாள் மதுரையிலிருந்து 100 கிமீ தொலைவில் இருந்த அந்த நூலகம் தேடிப் போய், அங்கு ஸ்கேன்னர் வசதி இல்லாததால் , அப்போது என் வசமிருந்த iPhone 8 plus camera ல் அதன் பக்கங்களைப் படம் பிடித்து வந்து எனது external hard drive ல் உடனடியாக சேமித்து வைத்துவிட்டேன்.

நேற்று நேரம் கிடைக்கவே அந்தப் புத்தகத்தின் காமிரா பிரிண்ட்டை முகநூலில் பதிவேற்றுகிறேன் . “எம்ஜிஆரின் உள்ளும் புறமும் “ என்ற நூலுக்கு இவ்வளவு வரவேற்பு இருக்குமென்று எதிர்பார்க்கவில்லை.

தொடர்ந்து அதனை பரப்புவோம். படித்த அறிவுடையோர் எம்ஜிஆர் என்ற பிம்பத்தில் இருந்து மீளட்டும். அரசியல் தெளிவு ஏற்படட்டும்.

நன்றி: அ. வெற்றிவேல்

By