சமீபத்தில், இந்திய ஜோடிகளில் ஒருவர் லுலு சூப்பர் மார்க்கெட்டில் எதிர்கொண்ட சம்பவம் திகிலடைய செய்தது. ஷார்ஜாவில் மாலையில் அவர்கள் வழக்கமான ஷாப்பிங் செய்தபோது, டிசம்பர் 6 ஆம் தேதி மாலை 7:30 மணியளவில் அவர்கள் லுலு சூப்பர் மார்க்கெட் சென்றனர். ஒவ்வொரு முறையும் லுலு சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் தங்கள் ஊர் தின்பண்டங்களை வாங்க அவர்கள் ஆசைபடுவார்கள். அதை போலவே அன்றும் ஒரு ஓலை பக்கோடா பாக்கெட் ஒன்றையும் வாங்கினார்கள் .

அவர்கள் வீட்டிற்கு திரும்பி பாக்கெட்டை திறந்தபோது, அழுகிய பிணவாடை யை கவனித்தனர். மேலும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தது அதில் இருந்த பொரித்த பல்லியின் உடலை பார்த்து தான். அதிர்ஷ்டவசமாக, அவர்களின் குழந்தை அந்த பாக்கேட்டை திறந்து சாப்பிடவில்லை. உடனே, தம்பதியினர் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று உணவுப் பொருள் மீதும் அதனை விற்பனை செய்த லுலு சூப்பர் மார்க்கெட் மீதும் புகார் அளித்தனர்.

ஷார்ஜா போலீசார் புட் இன்ஸ்பெக்ஷன் அதிகாரிகளை அழைத்து கொண்டு தம்பதியினரிடமிருந்த பக்கோடா பாக்கெட்டினை ஆய்வு செய்தனர். பிறகு சார்ஜா போலீசாரும் புட் இன்ஸ்பெக்ஷன் அதிகாரிகளும் தம்பதியினரை அழைத்துக்கொண்டு லூலூ சூப்பர் மார்க்கெட் சென்று அங்கிருந்த அனைத்து பக்கோடா மற்றும் உள்ள அனைத்து ஸ்நாக்ஸ் பாக்கெட்களை அப்புறப்படுத்தி ஆய்வுக்கு எடுத்து சென்றனர். மேலும் அதிகாரிகள் தம்பதியினரிடம், இந்த பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் எந்த ஒரு பொருளும் இனி அமீரகத்தின் மண்ணில் இறங்க முடியாத படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் லூலூ சூப்பர் மார்க்கெட் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

அமீரக நாடானது இந்தியர்களுக்கு இரண்டாவது தாய் நாடு போன்றதாகும் . இங்கு இந்திய முதலாளிகளால் நடத்தப்படும் கடைகளுக்கு இந்தியர்கள் தங்கள் ஊரின் உணவுகள், காய்கறிகள், மளிகை பொருள்கள்களை நம்பிக்கையுடன் வாங்க செல்வது வழக்கம். அங்கேயே இப்படி கவனக் குறைவாக விஷம் போன்ற உணவுகளை விற்பனை செய்தது இந்தியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அமீரகத்தில் மட்டும்மல்ல உலக நாடுகளில் உள்ள அனைத்து இந்திய முதலாளிகளும் மிகவும் கவனமாக உங்களது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை கெடாத வகையில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்பது உலக தமிழர்களின், இந்தியர்களின் எதிர்பார்ப்பாகும். லுலு மேனேஜ்மென்ட் தங்கள் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ளுமா?

-செய்தியாளர்

Hello Asia News,

Sharjah

By