சென்றவாரத்தில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு. ஆ. ராசா அவர்கள் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி? ஜெயலலிதா அவர்களை ஊழலில் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் சாட்டப் பட்டவர் என நீதிமன்ற நகல்களை மேற்கோளாக காட்டி பேசினார். தமிழகத்தின் இன்றைய முதல்வர் இ.பி.எஸ் அவர்களும், இறந்த ஜெயலலிதா அவர்களின் வழக்கறிஞர் ஜோதியும் இல்லை என மறுத்தார்கள். ஆ. ராசா அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து நீதிமன்ற தீர்ப்பின் நகல்களை கொடுத்தும், அதனை படித்தும் காட்டினார்.
ஊடகத்தினர் அவ்வளவு சோம்பேறிகளா? அல்லது அறிவு இல்லாதவர்களா? அல்லது அதிமுகவிடம் பெட்டியும், கவரும் வாங்குவதால் எதையும் படித்து மக்களுக்கு கொண்டு செல்லாதவர்களா?
மக்களே உங்களுக்கும் உரிமை இருக்கிறது, அந்த தீர்ப்பு நகலை பெறுவதற்கு.
இதோ, ஆ. ராசா ஊடகங்களிடம் மட்டும் கொடுத்த ஜெயலலிதாவின் முறையற்ற சொத்து குவிப்பு வழக்கின் 18 ஆண்டுகள் வாய்தா போராட்டங்களுக்கு பின் உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பின் உண்மை நகல்களை உச்சநீதிமன்றத்தின் இணையதள முகவரியிலேயே சென்று பெறுவது எப்படி என்ற விளக்கமும் , அதன் முழுமையான தீர்ப்பின் நகல்களையும் இணைத்துள்ளோம்.
விரும்பினால் இங்கு இணைத்துள்ள நகல்களை டவுன்லோடு செய்தும் படித்துக் கொள்ளலாம் அல்லது சுப்ரீம் கோர்ட் இணையத்தளம் சென்றும் டவுன்லோடு செய்து படிக்கலாம்.
- Type in the address bar as www.SCI.GOV.IN
- Click the menu shown as Judgements.
- Click the menu shown as Parties.
- Click the pull-down menu and select Petitioner.
- Enter the Petitioner name as State of Karnata
- Enter the date 14-02-2017 to 14-02-2017
- Enter the Captcha number shown in red colour.
- You can see the case details.
- Click the red letter 01-01-1970, and this is the judgment number.
- www.SCI.GOV.IN என தட்டச்சு செய்க
- ஜட்ஜமெண்ட் என காட்டப்பட்டுள்ள மெனுவைக் கிளிக் செய்க.
- பார்ட்டிஸ் எனக் காட்டப்படும் மெனுவைக் கிளிக் செய்க.
- மெனுவைக் கிளிக் செய்து பெட்டிஷனர் தேர்ந்தெடுக்கவும்.
- பெட்டிஷனர் பெயரை ஸ்டேட் ஆஃப் கர்நாடகா என உள்ளிடவும்.
- தேதியை 14-02-2017 முதல் 14-02-2017 என உள்ளிடவும்.
- சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள கேப்ட்சா எண்ணை உள்ளிடவும்.
- வழக்கு விவரங்களை நீங்கள் காணலாம். 01-01-1970 என்ற சிவப்பு எழுத்தை சொடுக்கவும், இது தீர்ப்பு எண்.
ஆ. ராசா வின் மீதான தீர்ப்பு எங்கே என்றால், தீர்ப்பு குற்றவாளி என்றிருந்தால் அவர் வெளியில் நடமாடி கொண்டு இ .பி . எஸ் அவர்களை வம்பிழுத்திருக்க மாட்டார். அவர் மீது ஜோடிக்கப்பட்ட குற்றசாட்டு என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளதால் அந்த நகல் தேவைப்படாது என்றே கருதுகிறோம். அது மாறினால் அதன் நகலும் இங்கே பதியப்படும்.


