கட்டுரை: மோகன் இராமசாமி

இக்கட்டுரையை ஒலியில் கேட்க,

அல்பர்டா, கனடா: திருவருட்பிரகாச வள்ளலார் என்று மக்களால் அன்பாக அழைக்கப்படும் திரு. இராமலிங்க சுவாமிகள், 1865 ஆம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை, வடலூரில் நிறுவினார். அவரது தத்துவங்களாலும், செயல்பாடுகளாலும் உலக மக்களுக்கு மறக்க முடியாத பணி செய்து வந்துள்ளார். 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரின் போதனைகள் இன்று பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.

வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம், மனிதர்களிடையே சமத்துவத்தையும், அன்பையும், ஜீவகாருண்யத்தையும் வலியுறுத்துகிறது. இந்த இயக்கத்தின் அடிப்படையான நான்கு இலக்குகள் ஏமசித்தி, தத்துவநிக்ரகம், சகாக்கல்வி, மற்றும் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்.

அவரது இந்த ஆன்மீக இயக்கம், இன்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது பக்தர்களால் பரப்பப்படுகிறது. கனடாவின் அல்பர்டா மாநிலத்தில் இயங்கும் ISAW CANADA (International Society of Ancient Wisdom) பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்திருக்கிறது.

ISAW CANADA அமைப்பின் முக்கிய செயல்பாடுகளில், ஏழைகளுக்கு உணவளிப்பு, உடல் நல சேவைகள், கல்வி உதவிகள் மற்றும் ஆன்மீக பயிற்சிகள் அடங்கும். இந்த அமைப்பு, வள்ளலாரின் கருணை மற்றும் அன்பின் பின்புலத்தில் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபடுகிறது.

ISAW CANADA, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்வறிக்கை மூலம் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சிறியவர் முதல் பெரியவர்களுக்கான சன்மார்க்க கல்வி மற்றும் சன்மார்க்க பயிற்சி பட்டறைகள் நடத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்துஇட்டுள்ளனர். இந்த புதிய கல்வி திட்டம், சன்மார்க்க வாழ்க்கை முறையை அனைத்து வயதினர் இடையேயும் கொண்டு சேர்க்க உதவும். குறிப்பாக சன்மார்க்க மருத்துவ முறைகளை இளம் தலைமுறையினர் கற்று தெரிந்து கொள்ள வழிவகை வகுக்கும். ISAW CANADA நிர்வாகிகள், வள்ளலாரின் வழியைப் பின்பற்றும் அனைவரையும் மற்றும் ஆர்வமுள்ள நபர்களையும் இந்த பாடநெறியில் சேர்ந்து தங்கள் ஞானத்தை அதிகரிக்க அழைக்கின்றனர்.

இவ்வாறு, உலகம் முழுவதும் பரவியுள்ள வள்ளலாரின் பக்தர்கள், அவரது போதனைகளை பின்பற்றி, உலகுக்கு ஒளியாக விளங்குகின்றனர்.

This news is brought to you by:

By