வரலாற்றின் நீண்ட நெடுங்காலமாகவே தமிழ்ச்சங்கங்கள் துவங்கப்பட்டு தமிழ் வளர்ப்புக்கும், தமிழரின் ஒற்றுமைக்கும் ஒரு கருவியாகவே செயல்பட்டு வருகின்றன. சங்கம் என்பது சங்கமிப்பது, இணைவது குறித்ததாகும். உலகின் மூலை முடுக்கிலுள்ள சிறு, பெரு நகரங்களில் வாழும் தமிழர்கள் அவர்களின் இணைப்புக்காக சங்கம் துவங்கி தங்களின் மொழியையும், தங்களின் கலாச்சாரத்தையும் தம் மக்களிடமும், பிறமொழி பேசுவோரிடமும் தெரியப்படுத்தி வருகின்றனர்.
கனடாவில் உள்ள சார்னியா நகரில் சார்னியா தமிழ்ச்சங்கம் துவங்கப்பெற்று அதன் முதல் நிகழ்ச்சியாக தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை கடந்த சனவரி (தை) 2024 சிறப்புற கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் சார்னியா தமிழ்ச்சங்கத்திற்கான இலச்சினை தூய்மையான வெள்ளுடையில் திருவள்ளுவர் நிழற்படம் கொண்டும் அந்த நகரத்தின் முக்கிய பாலத்தையும் அடையாளப்படுத்தும் விதமாகவும் உருவாக்கி இருந்தனர்.




சங்கத்தின் முதல் நிகழ்ச்சி பொங்கல் விழா மிக வண்ணமயமாக இனிதே நடந்து முடிந்தது, இந்த நிகழ்வின் வெற்றிக்கு அதன் நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்களின் உழைப்பும் உறுதுணையாக இருந்ததாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி சிறப்புற நடைபெற கொடையளித்த நிறுவனங்களுக்கு இந்த சங்கம் நெஞ்சார்த்த பாராட்டுக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்தச் சங்கத்தின் வரவிருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்கள் இந்த சங்கத்தின் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம்.



மேலே உள்ளப் படத்தில் சார்னியா தமிழ்ச் சங்க நிர்வாகிகள்

சார்னியா தமிழ்ச் சங்க உறுப்பினர்கள்
சார்னியா தமிழ்ச்சங்கம் நிர்வாகிகள்
திரு. சதிஷ் லட்சுமணன், தலைவர் 519-333-9713
திருமதி. பிரசன்னா துணைத்தலைவர் 226-886-1501 திரு. ராஜா வாசுதேவன், செயலாளர் 647-410-3140
திரு. திருமலை, துணைச்செயலாளர் 519-381-0338
திரு. பார்த்திபன் லட்சுமணன், பொருளாளர் 519-330-0699
திரு. முருகானந்தம் சுந்தரராஜன், துணைப் பொருளாளர் 587-712-2309
திரு. சிவா சுப்பிரமணியம், கமிட்டி உறுப்பினர் 226-402-0924
திரு. மார்ட்டின், கமிட்டி உறுப்பினர் 437-987-13433
திருமதி. தீபா சதிஷ், கமிட்டி உறுப்பினர் 519-377-7056 திரு. சுரேஷ் நாகராஜன், கமிட்டி உறுப்பினர் 587-590-9345 செல்வி. லக்கி, கமிட்டி உறுப்பினர் 519-466-2696 திருமதி. சுகந்தி, கமிட்டி உறுப்பினர் 416-553-3734 திரு. சேகர், கமிட்டி உறுப்பினர் +91-98940 82405
செய்தியாளர்: க.கண்ணன்.






