DMK calls for 'emergency meet' at Anna Arivalayam - News Today | First with  the news

அறிவாலய வளாகத்தின் மையத்தில் அண்ணா கை உயர்த்தி நிற்கிறார் சிலையாக! அந்த சிலைக்கு கீழே கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்று உள்ளது! ஆனால், அறிவாலயத்தின் கேட்டில் சூட்சுமமான  கண்ணுக்கு தெரியாத ஒரு போர்டு மாட்டப்பட்டுள்ளது. அதில், ‘’இங்கு புதிய ஆட்சிக்கு காரணமான பழைய கட்சிக்கு நிர்வாகப் பதவிகளுக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறார்கள்!’’  என எழுதப்பட்டுள்ளது.

தகுதி : ஏதாவது ஒரு கட்சியில் அரசியல் அனுபவம்.

கூடுதல் தகுதி: அதிமுக, அமமுகவில் இருந்து வருவது.

சிறப்பு தகுதி: கரப்ஷன், கலெக்‌ஷன், கமிஷனில் முன் அனுபவம்!

நன்றி :சாவித்திரி கண்ணன், அறம் இணைய இதழ்

அதிமுக, அமமுக, மநீம, நாதக கட்சிகளிலிருந்து வந்து முக்கிய பதவிகளையும், வரும் உள்ளாட்சி தேர்தல், மற்றும் மாநிலங்களவை தேர்தலை குறிவைத்து வருபவர்களை சேர்த்துக் கொண்டு காலம் காலமாக உடன்பிறப்புகளாய் வலம்வந்தவர்களை உதாசீனப்படுத்திவிடக் கூடாது என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
உதாரணம்: தமிழ்நாட்டின் மின்சார துறை
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சென்ற ஆட்சியில் சொல்லப்படட ஊழல் புகார்கள் திமுகவில் சேர்ந்ததால் புனிதமாக்கப்பட்டது போல மற்றவர்களும் ஆகிவிட கூடாது என்பதே.

ஊழல்வாதிகள், கற்பழிப்பு குற்றவாளிகள், ரவுடிகள் பிஜெபியில் புனிதநீர் தெளித்து சேர்த்து கொள்வதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.

By