கொலம்பியா அதிபர்: குஸ்டாவோ பெட்ரோ

ஜனவரி 2025 இல், அமெரிக்க இராணுவ விமானங்களில் நாடுகடத்தப்பட்ட கொலம்பிய குடியாளர்களை ஏற்றிச் சென்ற இரண்டு விமானங்கள் கொலம்பியாவில் தரையிறங்க கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ அனுமதிக்க மறுத்ததால், கொலம்பியா மற்றும் அமெரிக்கா இடையே இராஜதந்திர சிக்கல் உருவானது. ஒவ்வொரு விமானமும் சுமார் 80 கொலம்பியர்களை ஏற்றிச் சென்றிருந்தது.

ஜனாதிபதி பெட்ரோ, நாடுகடத்தலுக்காக இராணுவ விமானங்களைப் பயன்படுத்துவது ஏற்க முடியாதது என்று கண்டித்தார். புலம்பெயர்ந்தோர் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இதைச் Civilian விமானங்களின் மூலம் நடத்த வேண்டும் என்றும் அவர்களின் “கண்ணியமான திரும்புகையை” உறுதி செய்ய தனது ஜனாதிபதி விமானத்தையும் வழங்க தயாராக இருப்பதாக அறிவித்தார். அதே நேரம் இந்தியா, அதன் பிரதமர், மந்திரிகள் அமைதி காத்தனர்.

அமெரிக்காவின் பதிலடி – டிரம்ப் எச்சரிக்கை

இதற்கு பதிலளிக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனைத்து கொலம்பிய இறக்குமதிகளுக்கும் 25% வரி விதிக்க முடிவுசெய்தார். மேலும், கொலம்பியா இணங்கவில்லை என்றால் அதை 50% ஆக அதிகரிக்கலாம் என எச்சரித்தார். இதோடு,

  • கொலம்பிய அரசாங்க அதிகாரிகளுக்கு பயணத் தடைகள் மற்றும் விசா ரத்துகள் அமல்படுத்தப்படும்.
  • கொலம்பிய நாட்டினரும், கொலம்பியாவிலிருந்து வரும் சரக்குகளும் அதிக கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.

கொலம்பியா – அமெரிக்கா பேச்சுவார்த்தை & ஒப்பந்தம்

பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கொலம்பியா நாடுகடத்தப்பட்ட குடியேறிகளை ஏற்க ஒப்புக்கொண்டது, ஆனால் சில முக்கிய நிபந்தனைகளுடன்:

  1. நாடுகடத்தப்படும் குடியேறிகளுக்கு கைவிலங்கு (handcuff) போடக்கூடாது.
  2. அவர்கள் புகைப்படம் எடுக்கப்படக் கூடாது.
  3. அமெரிக்க ராணுவ அதிகாரிகள் அவர்களை மீண்டும் அழைத்துச்செல்லக்கூடாது – மாற்றாக, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) அதிகாரிகள் பாதுகாவலர்களாக செயல்படுவார்கள்.
  4. கொலம்பியா தன் சொந்த விமானப்படை விமானங்களை அனுப்பி, நாடு திரும்புபவர்களை மரியாதையுடன் அழைத்துச் செல்லும்.

இறுதியாக இந்தியர்கள் கை, கால்களில் விலங்கு போட்டு அழைத்து வரப்பட்டனர். அந்தப் புகைப்படத்தை நாங்கள் வெளியிட விரும்பவில்லை.

இந்திய அரசுக்கு தன்மானம் இருந்தியிருந்தால் இது போல தன் மக்கள் இழிவுபடுத்தப்பட்டிருப்பதை அனுமதித்தரிக்காது என பெரும்பாலான இந்தியர்கள் கொலம்பியா அதிபரை மேற்கோள்காட்டி கூறிவருகின்றனர்.

By