இரா.பத்மநாபன்

கனடாவிலும் காலை உணவுத் திட்டம் அறிமுகம்!

Image Courtesy: CBC News, Canada

கனடா: தமிழகத்தில் மட்டுமில்லாமல் கனடாவிலும் காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திராவிட மாடலுக்கு  கிடைத்த வெற்றியாகும்’ என திமுக தெரிவித்துள்ளது.


கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எக்ஸ் (X) சமூகவலைதளத்தில், “கனடா பள்ளி குழந்தைகளுக்கு 1 பில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் 5 ஆண்டுகளுக்கு ஆறாயிரத்து நூற்றி நாற்பது கோடிகள்) மதிப்பில் தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப் போகிறோம்” என பதிவிட்டு இருந்தார்.

தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் தமிழகத்தில் மட்டுமில்லாமல், வெளிநாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவது திராவிட மாடலுக்கு  கிடைத்த வெற்றியாகும் என முதல்வர் ஸ்டாலின்  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

By