Reporter: Padmanaban Rajagopalan, Canada

World Logo png download - 1669*937 - Free Transparent World Of Warcraft  Legion  png,png,png,png,png,png,png,png,png,png,png,png,png,png,png,png,png,png,png,png  Download. - CleanPNG / KissPNG

உங்களில் பலருக்கு புதுப்புது ஐடியாக்கள் உங்களது வர்த்தக, வியாபார, கல்வி மற்றும் புது டெக்னாலஜி என எல்லைகளின்றி தோன்றிக் கொண்டே இருக்கும்.


ஆனால் உங்களது ஐடியாக்களை நீங்களே பயன்படுத்தி வெற்றி கண்டீர்களா என்பதும் அல்லது உங்களின் ஐடியாக்களை கொண்டு உங்களது நண்பர்கள், அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்கள் வெற்றி பெற்றுள்ளதா?


கடந்த பல ஆண்டுகளாக பல சிறிய, நடுத்தர, பெரிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களிடம் அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தேவையான பல ஐடியாக்களை பெற்று வருகின்றன. ப்ராஜெக்ட் செலவு குறைத்தல், கட்டுமான செலவுகள், வீண் செலவுகள் என பல வகைகளில் பணியாளர்களிடம் ஐடியாக்கள் பெறுவதும், அதற்கு அவர்களுக்கு ஊக்கத்தொகை, பரிசுத்தொகை மற்றும் சிறப்பு அங்கீகாரம் போன்றவைகளை அந்த் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.


தற்போது, உலகிலுள்ள பல பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான சில சிக்கல்களுக்கு பொதுவெளியில் தீர்வை தேடி வருகிறார்கள். இதற்கு உலகின் எந்தவொரு மூலையில் இருப்பவரும் தங்கள் ஆலோசனைகளை வழங்கலாம். அவற்றிற்கு அந்த நிறுவனங்கள் தீர்வின் தன்மை, அதன் பயன் ஆகியவற்றுக்கு தகுந்தார் போல ரூபாய் 5000 முதல் ரூபாய் 5 கோடியும் அதற்கு மேலும் வழங்குகிறார்கள்.

அந்த நிறுவனங்கள் சில மூன்றாம் நபரால் இயக்கப்படும் இணையதளங்களின் மூலம் உங்களை வந்தடையும். அதில் ஒன்றுதான் innocentive.com இது போல இணையத்தில் பல நூறு இணையத்தளங்கள் உள்ளன. அவைகளை நோக்கி செல்லுங்கள். ஐடியாக்களை சொல்லி பரிசுகளை அள்ளுங்கள்.

By