
என்னோட “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தில் இந்துக்களை அவமதிச்சிட்டதா ஒரு “தேசிய நாளிதழ்னு” சொல்லிக்கிற சிண்டு முடியுற பேப்பர் ஒன்னு செய்தி போட்டுருந்துச்சி. எனக்கு அப்படியே ஷாக்! ஏன்னா அந்தப்படத்துல அம்மன் என் கூடவே இருக்கிற மாதிரி காட்சி வச்சுட்டு நான் எப்படி அவங்க சார்ந்த மதத்தை இழிவு படுத்துவேன். அந்தப் படத்துல இந்துமத சாமியார்களை மட்டும் தாக்கி வசனம் வர்றதாகவும், மற்ற மத சாமியார்களப் பத்தி சீனே இல்லனு வேற ஆதங்கம். இந்தப்படத்துல மனோபாலா கிறிஸ்த்துவ மதப் பிரசாரம் பண்ற சீன யாரோ ஒரு பெரிய தல தலையிட்டு நீக்கிட்டாங்கனு வேற வாய்க்கும், கைக்கும் வந்தத எழுதி வேண்டாத சிண்டு முடியற வேலை!

படம் முழுக்க அம்மனோட நான் வரும் கதையா இருக்குற இந்தப் படத்துக்கு அந்த அடுத்த மதத்து சீன் தேவைப்படல. அதனால தூக்கிட்டோம். நான் பிறப்பால் ஒரு இந்து. என் வீட்ல இருக்குற குப்பையப் பொறுக்கி போடாலாம்னு ஜாலியா ஒரு படத்தக் கொடுத்தா, அக்கம்பக்கமுள்ள வீட்ல இருக்குற குப்பையையும் ஏன் பொறுக்கிப் போடலனு கேள்வி கேட்றானுங்க. முதலில் அந்தப் பேப்பர்ல இந்தப் படத்துக்கு நல்ல விமர்ச்சனம் எழுதியிருந்தாங்க.

ஒருவேள அவங்க முதலாளி அதப் பார்த்துட்டு காண்டாயிட்டாரு போல. யாரு அந்த முதலாளின்னு பாக்குறீங்களா, அதாங்க கோயம்புத்தூர் பக்கத்துல பச்ச பசேல்னு இருந்தக் காட்ட அழிச்சு, அங்க இருந்த யானைகள கொன்னு அதோட பாதையெல்லாம் அழிச்சு ஆனந்தமா ஆடி, மரம் நடுறேன், மட்டைய நடுறேன்னு உதார் கொடுத்துக்கிட்டு இருக்குறவண்ட்ட, வாங்கித் திங்கிற அந்த தேசியப் பத்திரிக்கைக்கு என்னப்பத்தியும், என்னோட சினிமா பத்தியும் பேச ஏதாவது தகுதியிருக்கா?
(RJ பாலாஜியின் மனசாட்சி இப்படித்தான் பேசியிருக்கும் என்ற அனுமானத்தில்)

